Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (16.09.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

மின் பாதை பராமரிப்பு பணிகள் 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  

 

அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மற்றும் நீடூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை 16.09.2025 நடைபெற இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்பட்டு இடங்கள் 

* கூடறைநாடு

 * இரயில்டி

 * காவேரி நகர்

 * ஆரோக்கியநாத புரம்

 * ஆராயத்தெரு

 * குமரக்கட்டளை தெரு

 * பூக்கடைத்தெரு

 * மேல ஒத்தசாகு

 * அண்ணா வீதி

 * அறுபத்திமூவர் பேட்டை

 * சின்ன இறகுழி தெரு

 * தோப்புத்தெரு

* மங்கநல்லூர்

 * மேல மங்கநல்லூர்

 * பெரும்புர்

 * ஆனந்தநல்லூர்

 * வேலங்குடி

 * கழனிவாசல்

* வில்லியநல்லூர்

* நடராஜபுரம்

* மண்ணிப்ள்ளம் 

* மல்லியக்கொல்லை

* சேந்தூர்

* மேலநல்லூர்

* கொண்டல்

* பாலக்குடி

* அருவாபாடி

 * கடவங்குடி

மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். மேற்கண்ட பகுதிகளிலும் மின் வினியோகம் தடை செய்யப்பட்ட உள்ளதாக உதவி செயற்பொறியாளர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும்  மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.