தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது இரண்டாம் சுற்று மழையது பதிவாகி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்த மழை

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 16 -ம் 35 செ.மீ, 17 -ம் தேதி 31 செ.மீ மழை பதிவான நிலையில் நேற்றை தினம் சற்று மழை குறைந்து கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 15 செ.மீ மழையானது பதிவாகியுள்ளது. இது கடந்த இரண்டு தினங்களை காட்டிலும் 50 சதவீதம் மழை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை மாவட்டத்தின் கடந்த 24 மணிநேர மழையளவு 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மிதமான மழையானது பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை 30.10 மில்லிமீட்டர் , மணல்மேடு 17.00 மில்லிமீட்டர், சீர்காழி 23.00 மில்லிமீட்டர், கொள்ளிடம் 12.80 மில்லிமீட்டர், தரங்கம்பாடி 40.20 மில்லிமீட்டர், செம்பனார்கோயில் 35.20 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகப்படியாக தரங்கம்பாடியில் 4 செ.மீ மழையும், குறைந்த அளவாக கொள்ளிடத்தில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 15 செ.மீ மழையானது பதிவாகியுள்ளது. இது நேற்றை விட 50 சதவீதம் குறைவான மழை பொழிவாகும்.

Continues below advertisement

இன்று மழை நிலவரம் என்ன?

முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், "இன்று (நவம்பர் .19) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 20-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்கள்

நவம்பர் 21-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டங்கள் 

நவம்பர் 22- ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 23-ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 24-ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னைக்கு வானிலை முன்னறிவிப்பு

இன்றைய தினம் (19-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.