மயிலாடுதுறை: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நவம்பர் -16 ம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை நவம்பர் - 17 -ம் தேதி காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவியது.ஸஇது இன்று நவம்பர் - 18 -ம் தேதி  மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

மழை பதிவாகும் என எதிர்பார்க்கும் இடங்கள் 

இதன் காரணமாக இன்று நவம்பர் - 18 ம் தேதி தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் விழுப்புரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்ட மழை நிலவரம் 

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதி, விளைநிலங்கள் என பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலே இப்த இந்த மழை தொடரும் பட்சத்தில் பயிர்கள் தண்ணீர் மூழ்கி அழுகி பாழாகும் நிலைக்கு தள்ளப்படும் என மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கவவை தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த மாதம் இறுதி மாவட்டத்தில் பதிவான கனமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான கணக்கெடுப்பு முழுமையாக சரியாக நடைபெறாத சூழலில் தற்போது மீண்டும் பெய்துவரும் இந்த மழையால் ஏற்படும் பாதிப்புகளை அரசு சரியான முறையில் கணக்கிடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால்,கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் வட மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பிருப்பது தெரிய வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 

அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

வரும் 21, 22 ஆகிய தேதிகளில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதில், அரியலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழையானது பதிவாகியுள்ளது.

* மயிலாடுதுறை 57.50 மில்லிமீட்டர் 

* மணல்மேடு 39.00 மில்லிமீட்டர்

* சீர்காழி 66.60 மில்லிமீட்டர்

* கொள்ளிடம் 49.20 மில்லிமீட்டர்

* தரங்கம்பாடி 32.00 மில்லிமீட்டர்

*செம்பனார்கோயில் 65.60 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அதிகப்படியாக 6 செ.மீ மழை சீர்காழியிலும், குறைந்த அளவாக தரங்கம்பாடியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 31 செ.மீ மழையானது பதிவாகியுள்ளது. இது நேற்றை விட 4 செ.மீ குறைவான மழை பொழிவாகும்.