மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் சிரமங்களை போக்கும் வகையில், அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் சிறப்புத் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது தவெக ஆட்சிளும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் நோக்கில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இந்த மக்கள் நலத் திட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள இலக்கு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திட்டமாக இருந்து வருகிறது. 

குறிப்பாக, உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் நடமாட இயலாத முதியோர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுடன், அரசின் சேவைகள் நேரடியாக மக்களின் வீடுகளுக்கே சென்று சேர்வதை உறுதி செய்யும் ஒரு முன்மாதிரி நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

பயனாளர்களின் விவரங்களும் மாவட்டத்தின் பரந்த செயற்பாடும்

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்தமுள்ள 447 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த குடும்ப அட்டைகள் இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தச் சிறப்பான திட்டத்தின் வாயிலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 24,155 குடும்ப அட்டைகள் பயன்பெற்று வருகின்றன. 

குறிப்பாக, ஒரே குடும்ப அட்டையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வசிக்கும் குடும்பங்கள், 65 முதல் 70 வயதினை எட்டிய முதியவர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளைத் நேரடியாகத் தேடிச் சென்று நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலம் ஏழை எளிய முதியோர்கள் எவ்வித அலைச்சலுமின்றி தங்களுக்குரிய உணவுப் பொருட்களை தங்களது வீடுகளிலேயே பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

நவம்பர் மாதத்திற்கான விநியோகத் தேதிகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும்

நடப்பு மாதமான நவம்பர் 2026-க்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வரும் நவம்பர் 4 மற்றும் நவம்பர் 5 ஆகிய இரண்டு நாட்களில், ஒரே குடும்ப அட்டையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவரையும், 65 முதல் 70 வயதினை கொண்ட முதியவரையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளையும் கொண்டுள்ள அனைத்துக் குடும்பங்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் தங்குதடையின்றி அனைத்துத் தகுதியான பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் முடக்கிவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் அன்பான வேண்டுகோள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தகுதியுள்ள பயனாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட நாட்களான நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தங்களது வீடுகளிலேயே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான குடிமைப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் வீடுகளுக்கு வரும்போது அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும், விநியோகத்தில் ஏதேனும் குறைகள் இருப்பின் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார். அரசின் இந்தச் சீரிய திட்டம் மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையே பெரும் பயனளிப்பதாக ஏற்படுத்தியுள்ளது.