முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 22, 2025 முதல் செப்டம்பர் 12, 2025 வரை மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடைபெறவுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உடனடியாக ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளனர்.
5 பிரிவுகளில் போட்டி
இந்த ஆண்டு, முதலமைச்சர் கோப்பை போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள்,மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 முக்கிய பிரிவுகளில் நடத்தப்பட உள்ளன. மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான போட்டிகளும், மாநில அளவில் மொத்தம் 37 வகையான போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.
முன்பதிவு கட்டாயம்
இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், முதலமைச்சர் கோப்பைக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட https://sdat.tn.gov.in அல்லது https://cmtrophy.sdat.in என்ற இணையதளங்கள் மூலம் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவு வாரியாக போட்டிகளின் முழு விவரம்
-
1 பள்ளி மாணவ, மாணவியர் பிரிவினர்
(01.01.2007 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் மற்றும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயில்பவர்கள்)
-
மாவட்ட மற்றும் மாநில அளவில் (15 வகைகள்):
தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, வாலிபால், கைப்பந்து, கேரம், சதுரங்கம், கோ-கோ.
-
மண்டல மற்றும் மாநில அளவில் (7 வகைகள்):
கடற்கரை கையுந்துபந்து, டென்னிஸ், பளுதூக்குதல், வாள்சண்டை, ஜூடோ, குத்துச்சண்டை, சாலை சைக்கிளிங்.
- நேரடியாக மாநில அளவில் (2 வகைகள்): ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ்.
2. கல்லூரி மாணவ, மாணவியர் பிரிவினர்:
(01.07.2000 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் மற்றும் 25 வயதிற்குட்பட்டவர்கள்)
- மாவட்ட மற்றும் மாநில அளவில் (15 வகைகள்): தடகளம், இறகுப்பந்து, பால் பேட்மிண்டன், கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, வாலிபால், கைப்பந்து, கேரம், சதுரங்கம்.
- மண்டல மற்றும் மாநில அளவில் (7 வகைகள்): கடற்கரை கையுந்துபந்து, டென்னிஸ், பளுதூக்குதல், வாள்சண்டை, ஜூடோ, குத்துச்சண்டை, சாலை சைக்கிளிங்.
- நேரடியாக மாநில அளவில் (2 வகைகள்): ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ்.
3.மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்: (வயது வரம்பு இல்லை)
- மாவட்ட மற்றும் மாநில அளவில் (7 வகைகள்): தடகளம், ஸ்டண்டிங் இறகுப்பந்து, வீல்சேர் டென்னிஸ், அடாப்டட் வாலிபால், எறிபந்து, கபடி, கால்பந்து.
- செரிப்ரல் பல்சி நேரடியாக மாநில அளவில் (2 வகைகள்): தடகளம், கால்பந்து.
4.பொதுமக்கள் (ஆடவர் மற்றும் மகளிர்) பிரிவினர்:
(15 முதல் 35 வயது வரை)
- மாவட்ட அளவில் (6 வகைகள்): தடகளம், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், சிலம்பம்.
- மாவட்ட மற்றும் மாநில அளவில் (2 வகைகள்): இறகுப்பந்து, கபடி.
- நேரடியாக மாநில அளவில் (தனிநபர் போட்டிகள்): Echess, Street Fighter, Efootball.
- நேரடியாக மாநில அளவில் (குழுப் போட்டிகள்): Pokemon Unite, Valorant, BGMI என மொத்தம் 6 வகையான இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள்.
5.அரசு ஊழியர்கள் பிரிவினர்
- மாவட்ட அளவில் (4 வகைகள்): தடகளம், சதுரங்கம், கபடி, வாலிபால்.
- நேரடியாக மாநில அளவில் (2 வகைகள்): இறகுப்பந்து, கேரம்.
மேலும் விவரங்களுக்கு...
இப்போட்டிகள் குறித்த மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703459 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, முதலமைச்சர் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.