மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வளாகத்தில் 2 வது புத்தகத் திருவிழா இன்று 02.02.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி  தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களாக தீவிரமாக செய்து வந்தனர். இந்நிலையில் இன்று புத்தகத் திருவிழாவினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவங்கி வைக்க உள்ளார். 




அதனைத் தொடர்ந்து 03.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை செந்தீ கலைக்குழு நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் சிவசங்கரனின்  புத்தகப் “பூக்களை நுகர்வோம்” என்ற தலைப்பில் சிறப்புரையும், 7 மணி முதல் 8 மணி வரை “படிப்போம் படைப்போம்” என்ற தலைப்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர். ஜெய. ராமமூர்த்தியின் சொற்பொழிவும் நடைபெறுகிறது.




04.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை சப்தர் ஹஸ்மீ கலைக்குழு வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “படித்து உவக்கும்” என்ற தலைப்பில் முதுகலை தமிழாசிரியர் (ஓய்வு) இரா. செல்வகுமாரின் சொற்பொழிவும் 7 மணி முதல் 8 மணி வரை “வாசிப்பின் வாசல்கள்;” என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர் மற்றும் திறனாய்வாளர் சா.தமிழ்ச்செல்வனின் சொற்பொழிவும்,




05.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்டார் கலைக்குழு வழங்கும் கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் கலை நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “செந்தமிழ்ச்சுவை” என்ற தலைப்பில் தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி; செயலாளர் இரா.செல்வநாயகத்தின் சொற்பொழிவும் 7 மணி முதல் 8 மணி வரை திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் குழுவின்  “நெஞ்சிருக்கும் வரை நினைவிருப்பவை” என்ற தலைப்பில் மாபெரும் சொல்லரங்கம் நிகழ்ச்சியும், 




06.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாட்டுப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகை கிராமிய கலைக்குழு வழங்கும் நாட்டுப்புற ஆடல், பாடல் நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “நூலினை பகுத்துணர்” என்ற தலைப்பில் கலைமகள் கல்வியல் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர்.நா.ஞானசேகரனின்  சொற்பொழிவும் 7 மணி முதல் 8 மணி வரை மருத்துவர் கோ.சிவராமனின்  “உடல் பேசும் மொழி” என்ற தலைப்பில் மாபெரும் சொல்லரங்கம் நிகழ்ச்சியும்,  




07.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினாப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிலம்போசை கலைக்குழு வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “காலம் தோறும் தமிழ்;” என்ற தலைப்பில் கலைமகள் கலை அறிவியல்; கல்லூரி முதல்வர் முனைவர்.மா.வேதகிரியின் சொற்பொழிவும் 7 மணி முதல் 8 மணி வரை “குடும்பத்தின் வெற்றிக்கு காரணம் கணவனா மனைவியா” என்ற தலைப்பில் நகைச்சுவை இமயம்      புலவர்.இரெ.சண்முக வடிவேவின் குழுவின் சிறப்பு பட்டிமன்றமும், 




08.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கதை சொல்லும் போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுவாதி கலைக்குழு வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “வீட்டுக்கொரு நூலகம், என்ற தலைப்பில் உலகத் தமிழ்க் கழகம் மாவட்ட தலைவர் வாய்மெய் இளஞ்சேரனின் சொற்பொழிவும் 7 மணி முதல் 8 மணி வரை “புத்தகம் எனக்கு” என்ற தலைப்பில், வல்லம் தாஜ்பால் குழுவின் கவியரங்கமும்,  




09.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 7 மணி வரை தமிழ்ச்சித்தன் கலைக்குழு வழங்கும் நாட்டுப்புற ஆடல், பாடல் நிகழ்ச்சியும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை “எது அலகு” என்ற தலைப்பில் பூம்புகார் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர்.து.சந்தானலெட்சுமியின் சொற்பொழிவும்,




10.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை செல்வன் சூப்பர் வாய்ஸ் கலைக்குழு வழங்கும் கிராமிய பல்சுவை நடன நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை “மத்த விளாச பிரகசனம்” என்ற தலைப்பில் நாடக வியலாளர், மேனாள் பேராசிரியர், நிகழ்கலைத் துறை, தமிழ் பல்கலைக் கழகம் தஞ்சாவூர் பிரளயனின்  நாடகமும்,




11.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தனி நடிப்புப் போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை செல்வன் முத்துப்பாண்டி கலைக்குழு வழங்கும் நையாண்டி மேளம் கரகாட்டம் நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “குரள் ஒன்று குரல்; ஆறு” என்ற தலைப்பில் ஏ.வி.சி.கல்லூரி தமிழ் ஆய்வுத்துறை முன்னாள் தலைவர் சா.கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை “வாழ்தல் இனிது” என்ற தலைப்பில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறை தலைவர் முனைவர்.இரா.காமராசுவின் சொற்பொழிவும்,




12.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நடனப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை செல்வன் நன்னானே ரமேஷ் கலைக்குழு வழங்கும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “செம்மொழி தமிழ்” என்ற தலைப்பில் அகில இந்திய வானொலி மேனாள் நிகழ்ச்சி இயக்குனர் முனைவர்.சுந்தர ஆவுடையப்பனின் சொற்பொழிவும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை “பைந்தழிழ் துளிகள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்புவின் சொற்பொழிவும் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளின் நிறைவில் உள்ளுர் எழுத்தாளர்களை கௌரவித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  தெரிவித்தார்.