கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நபர் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையின் மூலம் ரூ.200 கோடி மதிப்பிற்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரான ரத்தன் டாடா-வை விட பணக்காரர் எட்வின் காஸ்ட்ரோ என்று சமூக வலைதளங்களில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.


ஒருவர் லாட்டரி அல்லது பரிசுத் தொகையின் மூலம் பணக்காரர் ஆகியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் ஓர் இரவில் மிக பெரும் பணக்காரரின் சொத்து மதிப்பை விட அதிகமாக பணம் வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஜாக்பாட் கிடைத்தபோது, அவர் வாழ்க்கை முற்றிலும் தலைகீழாக மாறியது. லாட்டரியை வென்றால் என்ன செய்வார்கள் என்று பலர் ஆச்சரியப்படுவார்கள். 


கோடிக்கணக்கில் பரிசுத் தொகை பெற்ற மிக அழகான இடத்தில் வீடு கிடைத்ததும்  அவர் இப்போது உலகப் பணக்காரருடன் ஒப்பிடப்படுகிறார். இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, ரத்தன் டாடாவின் தனிப்பட்ட சொத்துக்களை விட நான்கு மடங்கு அதிகமான சொத்துக்களை இந்த நபர் பெற்றுள்ளதாக பிரிட்டிஷ் செய்தி நிறுவனமாக Independent தெரிவித்துள்ளது. ரத்தன் டாடாவிடம் கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள  சொத்து உள்ளது.


ஆனால், இவரிடமோ ரூ.16,000 கோடி  அதிகமான மதிப்புள்ள ஜாக்பாட் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகின் மிக விலையுயர்ந்த, அழகான பகுதி ஒன்றில் வீடு வாங்கியுள்ளார் இந்த 30 வயதான நபர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மாளிகைக்கு கிட்டத்தட்ட 25 மில்லியன் செலுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.அவர் வீடு வாங்கியுள்ள பகுதியில் பெரும்பாலான ஹாலிவுட் பிரபலங்கள் வசிக்கின்றனர்.


யார் அந்த அதிஷ்டசாலி?


அமெரிக்கர் எட்வின் காஸ்ட்ரோ (Edwin Castro) நவம்பர் மாதத்தில் 2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,407 கோடி) மதிப்புள்ள மெகா லாட்டரியை வென்றார்.  ஊடகங்களில் அவரைப் பற்றி செய்திகள் வெளியான போதிலும் அவர் இது குறித்து எதுவும் பேசவில்லை.


 இந்நிலையில், வரி தொகை செலுத்திய பிறகு மொத்தம் 997 மில்லியன் டாலர் அதாவது ரூ.8,180 கோடி அவருக்கு கிடைத்துள்ளது. ரியல் எஸ்டேட் இணையதளமான டர்ட்டின் படி, கலிபோர்னியாவின் ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் வீடு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பங்களாவின் மதிப்பு விவரம்:


ஹாலிவுட் டவுனில் 30 மில்லியன் டாலர்கள், ஆனால் காஸ்ட்ரோ 5 மில்லியன் டாலர் தள்ளுபடியைப் பெற்றார். இந்த சொகுசு பங்களாவின் மொத்த பரப்பளவு 13,578 சதுர அடி. ஐந்து படுக்கையறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டுள்ளது. இந்த மூன்று அடுக்கு பங்களா, கண்ணாடி வேலைபாடுகள் செய்யப்பட்டது.  உடற்பயிற்சி கூடம், திரையரங்கம், பார்ட்டி ஹால், நீச்சல் குளம் மற்றும் வசதிகளும் உள்ளன. பால்கனி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவைகளும் இருக்கின்றன. 




இதையும் படிங்க..


இனி இரவில் நிம்மதியாக ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்.. புதிய விதிமுறைகளை அறிவித்த இந்திய ரயில்வே..


TANCET 2023: முதுகலைப் படிப்புகள்; டான்செட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?