தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணி நிறுவனமான Zoho Corporation, தற்போது தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் Content Writer மற்றும் Technical Writer பணிகளுக்கான வேலைவாய்ப்பை அறிவிக்கவுள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சி உள்ளிட்ட 5 நகரங்களில் நேரடி பணியிடங்கள் உள்ளன. இது போன்ற வாய்ப்புகள் வேலை தேடும் இளம் பட்டதாரிகளுக்கும், அனுபவமுள்ள எழுத்தாளர்களுக்கும் ஒரு வாய்ப்பாகும்.
முன்னணி ஐடி நிறுவனமான zohoவிலிருந்து தற்போது கன்டென்ட் மற்றும் டெக்னிக்கல் ரைட்டர்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலியில் உள்ள zoho நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போது பலருக்கும் ஐடி பணியில் சேர வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஐடி வேலை செய்ய பலரும் விரும்புகின்றனர். இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தான் முன்னணி ஐடி நிறுவனமான zoho புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது zohoவில் கன்டென்ட் மற்றும் டெக்னிக்கல் ரைட்டர்ஸ் (Content and Technical Writers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பிளாக், ஆர்ட்டிக்கிள், சோசியல்மீடியா உள்ளிட்டவர்களுக்கு கன்டென்ட் வழங்கும் பணியை தினமும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். டிஜிட்டல் மீடியா உள்ளிட்ட பிற பிளாட்பார்ம்களில் கன்டென்ட் ரைட்டிங் பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். பிற மார்க்கெட் மற்றும் டொமைன்ஸ்க்கு ஏற்ப கன்டென்ட்டை வழங்க வேண்டியிருக்கும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான ஊதியம் குறித்த விபரம் அறிவிக்கப்படவில்லை.
திறமை, முன் அனுபவம் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். தற்போது அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் கடந்துவிட்டது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இது மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா நாட்டுக்கான பணியாக இருந்தாலும் கூட பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் 5 இடங்களில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி சென்னை, சேலம், கோவை, திருநெல்வேி, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள zoho நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். எனவே தமிழகத்தில் ஐடி பணி வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்ததி கொள்ளலாம்.