திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் நடைபெற்ற விவகாரத்தில், கல்லூரி நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’எதிர்காலத்தில் இதுபோல் துரதிர்ஷமான நிகழ்வு எதுவும் நடக்காமல் இருக்க, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். கூடுதல் கவனத்துடன் நடந்துகொள்ளுமாறு பாதுகாப்பு அதிகாரியிடம் அறிவுறுத்தப்படும். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தேசிய தொழில்நுட்பக் கழகம் தெரிவித்துள்ளது.


மாணவியிடம் பாலியல் அத்துமீறல்


திருச்சி என்.ஐ.டி கல்லூரி மகளிர் விடுதியில் தனியாக இருந்த மாணவி ஒருவருக்கு, ஒப்பந்த ஊழியர் என்று சொல்லிக்கொண்டு வந்த ஆண் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வாட்ஸ்-அப் குழுக்களில் பரவி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதையும் வாசிக்கலாம்: "திருச்சி NIT மாணவர்களின் போராட்டம் வாபஸ்” எஸ்.பி. முன்னிலையில் மன்னிப்பு கேட்ட வார்டன்..!


தொல்லை கொடுத்த நபர் கைது


இந்த நிலையில் புகாருக்கு உள்ளான நபர் திருச்சி காவல்துறையால் உடனடியாக கைது செய்யப்பட்டார். இருப்பினும், அலட்சியமாக மாணவியை குறைசொல்லும் வகையில் செயல்பட்ட விடுதி வார்டன் மற்றும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


எஸ்.பி வருண்குமார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் நேற்று இரவு முதல் போராடி வந்த திருச்சி என்.ஐ.டி மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.



 


களத்திற்கு வந்த எஸ்.பி. வருண்குமார், போராடும் மாணவர்களிடம் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாலியல் சீண்டலுக்கு உள்ளான மாணவியிடன் தனி பெண் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதோடு, விடுதி வார்டனையும் அழைத்து மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வைத்தார்.


இந்த நிலையில் கல்லூரியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் நடைபெற்ற விவகாரத்தில், நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.


இதையும் வாசிக்கலாம்: NIT Student Letter : ”ஒரு WIFI-காக நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டுமா?” திருச்சி NIT மாணவி எழுதிய பகீர் கடிதம் இது..!