ஜூன் 1 - ஏபிபி நாடு EXCLUSIVE


தேனி மாவட்டம் தலைமை மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை எவ்வாறு எடுத்துச் செல்வது என மருத்துவமனை பணியாளர்களிடம் உறவினர்கள் கேட்டபோது ”நீங்களே போய் எடுத்துக் கொள்ளுங்கள்” என மருத்துவம் நிர்வாகம் கூறியதாக கூறி பிணவறையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடுக்கி வைக்கப்பட்டிருந்த  நிலையில் உடலை அடையாளம் தெரிய அடுக்கடுக்காக பேக் செய்யப்பட்டிருந்த  சடலங்கள் ஒவ்வொன்றாக அவிழ்த்து இறுதியில் இறந்த உறவினர் தண்டபாணியின் உடலை கண்டு பிடித்து எடுத்து சென்ற சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக  ஏபிபி நாடு செய்தி வெளியிட்டதை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்ய தேனி தலைமை மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.




செப்டம்பர் 1


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.  இன்னிலையில் அவரது உடல் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அடக்கம் செய்யப்பட்டது.




அக்டோபர் 13


தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் , பெரியகுளம் அருகே உள்ள  எண்டபுளி ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை (NIA) போலீசார் சோதனை மேற்கொண்டனர். பெரியகுளம் வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட வழக்கில் 2010ஆம் ஆண்டு வேல்முருகன் நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் தலைமறைவானார். இந்நிலையில்  நக்சல் அமைப்பினர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட வழக்கில் கைதான பெரியகுளம் அருகே உள்ள எண்டபுளி ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகரில் உள்ள வேல்முருகன் இல்லத்திலும், உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) அதிகாரிகள் காலை 8 மணி முதல் சோதனை மேற்கொண்டது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.




அக்டோபர் 16


தேனி மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கருக்கு மேலாக அரசு நிலத்தை முறைகேடாகப் பட்டா மாற்றி கையகப்படுத்திய அதிமுக பிரமுகர் அண்ணா பிரகாஷ் என்பவர் அதிகாரியுடன் கூட்டுச்சேர்ந்து அரசு நிலங்களை அதிகரித்தது கண்டுபிடிப்பு இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் தாசில்தார் என 17 பேர் பணி இடைநீக்கம் செய்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.




அக்டோபர் 21


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட புலிமான்கோம்பை கிராமம் அருகே அமைந்துள்ள மூனாண்டிபட்டி மலையடிவாரத்தில் உள்ள கிராமத்தில் சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு இருந்த எதிரியை நோக்கி வீசப்பட்ட வளரி இலக்கை அடைந்து மீண்டும் எறிந்தவரின் கையிக்கே மீண்டும் திரும்பும்படி வடிவமைக்கப்பட்ட தனித்துவமான ஆயுதம் வளரியின் வீரனின் வரை ஓவியம் இருப்பதை கண்டறியப்பட்டது.


நவம்பர் 7


முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தெரியாமல் கேரளா நீர்வளத் துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் தலைமையில் கேரளா அதிகாரிகள் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டது தொடர்பான எதிரொலியாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விமர்சித்து பேசிய நிலையில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தொடர் கருத்து மோதல் ஏற்பட்டது.




வீடியோ பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்


Mullai Periyar Dam: ஓபிஎஸ் vs துரைமுருகன்.. என்ன தான் பஞ்சாயத்து?


நவம்பர் 20


வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்ததன் எதிரொலியாக தேனி மாவட்டம் கம்பம் , கூடலூர் , காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படும் எந்த கால சூழ் நிலைக்கு ஏற்றவாறு விளையும் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயமும் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் அப்போது கேரள மாநிலத்திலும் பெய்த கடுமையான மழையால் திராட்சை வாங்க ஆட்கள் இல்லாத நிலையில் திராட்சையை கீழே கொட்டும் நிலை உருவானது விவசாயிகளிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியது.


நவம்பர் 30


தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் நான்காவது முறையாக நவம்பர் 30-ஆம் தேதி 142 அடி நீர் மட்டத்தை எட்டியது. அணையில் நீர் மட்டம் அதிகரித்ததையடுத்து இம்மாவட்ட விவசாயிகளும் தேனி மாவட்ட மக்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து என மேலும் 4 முறை என இதுவரையில் 8 முறை அணையின் நீர் மட்டம் 142 அடி வரை தேக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் தொடர்ந்து 142 அடி நீர் மட்டம் வரை தொடர்ந்து தேக்கப்பட்டதால் அணையின் உறுதித்தன்மையை குறித்து கேரளாவை சேர்ந்த சிலர் எழுப்பிய விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.




டிசம்பர் 4


தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஆன்மீக ஸ்தலமாகவும், சுற்றுலாத்தலமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வரலாறு காணாத அளவிற்கு அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுருளி அருவிக்கு நீர்வரத்து வரும்  மேகமலை வனப் பகுதிகளில் கடுமையான மழை பெய்ததால் சுருளி  நீர் வீழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.




டிசம்பர் 4


முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் மட்டத்தில் இருந்து 152 அடி வரை நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேனி மாவட்டம் கூடலூரை  சேர்ந்த பொதுமக்களும் விவசாய சங்கத்தினரும் 152 பொங்கல் வைத்து கேரள அரசு மற்றும் தமிழக அரசை ஈர்க்கும் விதமாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண