மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்:
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அம்மன் கோவிலுக்கு ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 8.4.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.
இதனிடையே முன்னதாக கடந்த 2018-ல் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுவாமி சன்னதி–யில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் கடுமையான சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடத்தவும், வீவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், பணிகள் அனைத்தும் முடிந்து 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
Sonia Gandhi: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி.. என்ன நடந்தது?
கும்பாபிஷேகம்:
அதன்படி தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான திருப்பணிகள் மேற்கொள்ள வசதியாக முதற்கட்டமாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 ஒன்பது நிலை கோபுரங்கள் மற்றும் அம்மன் ஏழுநிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கும் நாளை பாலாலயம் நடைபெறவுள்ளது.
அதற்காக இன்று காலை 8.30 மணி முதல் 11 மணி வரை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
Sonia Gandhi: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி.. என்ன நடந்தது?
இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண் யாகவாசனம், அங்கு ரார்ப் பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், ராஜகோபுரங்கள்கலாகர்ஷணம், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெறும். இதனையடுதது நாளை காலை 7.15 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, மகா பூர் ணாஹூதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று பின்னர் 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் ராஜகோபுர பாலாலயம் மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருப்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.