மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு ஒரு நாள் அனுமதி விடுமுறை அளிக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். 


மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் பணி புரியக்கூடிய பெண் காவலர்களுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் அனுமதியுடன் கூடிய விடுமுறை அளித்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார். 


இதையடுத்து, அவசர பணிகளுக்காக மதுரை மாநகர தெற்கு மகளிர் காவல் நிலையம் பெண் காவலர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


 மகளிர் தினத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாநகர் காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் 1300 பெண் காவலர்களுக்கு அனுமதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.