நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அமைச்சர் உதயநிதி இப்போதாவது சொல்வாரா? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அருண் சின்னதுரை Updated at: 05 May 2024 04:16 PM (IST)

நீட் தேர்வின் ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா? அதற்கு முதலமைச்சர் துணை புரிவாரா?  - ஆர்.பி.உதயகுமார் கேள்வி.

ஆர்.பி.உதயகுமார்

NEXT PREV





முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்ட வீடியோவில், ”நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடை படிப்பிற்கு  தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்காக இந்த மாணவ சேர்க்கையாக நீட் தேர்வு நடைபெற்று வருவது.

 

நீட் தேர்வு:


 

தற்போது இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் 557 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம்  மாணவர்கள் எழுகிறார்கள். 2021 ஆம் ஆண்டில் 1.10 லட்சம் மாணவர்கள்  தேர்வு எழுதியதில் 58,922 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்  2022 ஆம் ஆண்டு 1.32 லட்சம் மாணவர்களின் தேர்வு எழுதியதில் 67,787 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 2023 ஆண்டில் 1.45 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

 

இந்த ஆண்டு 2024யில் ஒன்றரை லட்சம் பேர்கள் தேர்வு எழுதி தயாராக இருக்கின்றார்கள். இதிலே நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால் இந்த நீட் தேர்வு ஏழை எளிய சாமானிய மக்களுக்கு இன்னும் எட்டாகனியாக உள்ளது. ஏனென்றால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கிறார்கள் நீட் தேர்வு எழுதக்கூடிய முன் வருகிற மாணவர்கள் இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிற போது ஒரு லட்சம் என்று சொன்னால் பத்தில் ஒரு சகவீதம் தான் உள்ளது.

 

மர்மம் என்ன?


நீட் தேர்வுக்கு தீர்வு காணும் வகையில இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் 7.5 இட ஒட்டிக்கீட்டு எடப்பாடியார் கொண்டு வந்தார். ஆனால் அந்தத் திட்டத்தை அரசு மூடி மறைக்கிறது. சாதனையை அரசு திரையிட்டு மூடப்பார்க்கிறது. ஆனால் நீட்தேர்வுக்கு உந்து சக்தியாக 7.5 சகவீத இடஒதுக்கீடு இருந்தது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டக்கனியாக இருந்த நீட் தேர்வை இதயக்கனியாக மாற்றியவர் எடப்பாடியார். இந்த அரசு வாய்ச்சொல் வீரராக இருக்கிறார்கள் தவிர மக்களுக்காக ஏதுமில்லை.


நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றால் நீட் தேர்வை ஒரே கையெழுத்திலே ரத்து செய்வோம் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினும் அவரது தந்தையாரும் திமுக தலைவர் ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு விடை காணவும், ரத்து செய்வதற்கு எந்த முயற்சி எடுக்கவில்லை மக்களை திசை திருப்புகிற, ஏமாற்றுகிற வகையில ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின்,ஒரு கோடி கையெழுத்தை பெற்று அதை எங்கே இருந்தது குப்பை கூடத்தில் தான். ஒரு கையெழுத்து ரகசியம் என்று கூறி ஒரு கோடி கையெழுத்து பெற்று சென்ற இடம் ரகசியம் மர்மம் என்ன? வாய் சொல்வீரர்களாக மக்களை ஏமாற்றி வருகிறார்கள், மாணவர்களை ஏமாற்றுகிறார்கள்.

எப்போது ரகசியம் வெளியிடுவீர்கள்?


மாணவர்களிடத்திலே நீட் தேர்வு ரத்து செய்வோம் என்ற ஒரு  நம்பிக்கையை ஏற்படுத்துகிற போது, அவரிடத்தில் அந்த நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு முன்பாக நாம் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற செயல் இல்லாத காரணத்தினால் இன்னைக்கு பல  மாணவர்கள் உயிர்களை நான் இழந்து இருக்கிறோம்.  நீட் தேர்வு ரத்து என்ற ரகசியம் சொன்ன உதயநிதி ஸ்டாலின் அவர்களே எப்போது வெளியிடப் போகிறீர்கள் ?ஒரு கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று சொன்ன அந்த ரகசியத்தை எப்போது உடைக்க போகிறீர்கள்? எப்போது மக்களிடத்தில் வெளியிடப் போகிறீர்கள் ஆகவே இது மக்களை இந்த ஏமாற்றுகிற இந்த செயலை நீங்கள் தொடர்ந்தால் எத்தனை உயிர்களை நாம் இன்னும் பலி கொடுக்க வேண்டும்.

 

7.5% இட ஒதுக்கீடு


உங்கள் வாக்கு வங்கிக்காக உங்கள் அரசியல் அதிகாரத்திற்காக நீங்கள் பொய்யை மெய்யாக்கி சொல்லுவதால் இன்னும் எத்தனை மாணவ மாணவிகள் இளைஞர்கள் உயிரை பலி கொடுப்பதற்கு இந்த தமிழகம் இன்றைக்கு இருக்கிறது என்பதை நான் எச்சரிக்கையாக சொல்கிறேன். இந்த நீட் தேர்வின் ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா? அதற்கு முதலமைச்சர் துணை புரிவாரா?  உண்மையிலே மக்கள் மீது அக்கறை இருக்கின்ற  எடப்பாடியார் 7.5% இட ஒதுக்கீடு கொடுத்து ஏழை எளிய சாமானிய அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களின் கனவை நினைவாக்கினார், அதை இன்றைக்கு அரசு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.


 

 



 





























 


























Published at: 05 May 2024 04:16 PM (IST) Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.