நேற்று மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபதூணில் தீபம் ஏற்ற வேண்டும் வந்த இந்து முன்னணியினரிடம் ‘We are not allowing’ என்று சொல்லி தடுத்து நிறுத்திவர்தான் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்.
முன் கூட்டியே தக்க பாதுகாப்பை செய்த கமிஷனர்
திருப்பரங்குன்றம் மலை பிரச்னை ஏற்கனவே சர்ச்சையில் இருக்கும் நிலையில், அதைவைத்து கார்த்திகை தீப திருநாளன்று அசாம்பவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது ஏற்கனவே திட்டமிட்டு நூற்றக்கணக்கான போலீசாரை பாதுகாப்பிற்கு நிறுத்தியிருந்தார் காவல் ஆணையர் லோகநாதன். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது என்று கூறி இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிகுமார் என்பவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் மலையை ஏற முயற்சித்தார். ஆனால், அவர்களை மதுரை காவல் ஆணையர் லோகநாதன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மலையில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர், இந்து தமிழர் கட்சியினர் அங்கிருந்த தடுப்புகளை எல்லாம் தூக்கி எறிந்து அசாதாரண சூழலை ஏற்படுத்த முயன்றனர்.
உடனடியாக உஷாரான காவல்துறையினர் அசாம்பவிதம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தியது, சிலரை உடனுக்குடன் தடுப்புக் காவலில் கொண்டுச் சென்றது.
அனுமதிக்க மாட்டோம் ; விளைவுகளை சந்திக்கிறோம் – போலீஸ் கமிஷனர்
இந்நிலையில், அங்கிருந்த காவல் ஆணையர் லோகநாதனிடமும், ராம ரவிக்குமார் வழக்கறிஞர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவோடு வந்திருக்கிறோம். எங்களை ஏன் அனுமதிக்க மறுக்கின்றீர்கள் என்று அவர்கள் கேட்க, அதற்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன், இங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. நீங்கள் இப்படி சென்று மலையில் தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட்டு அது கலவரமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் உங்களை மலையேற அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
‘We are not allowing’ ஒரே வார்த்தையில் சொன்ன கமிஷனர் லோகநாதன்
இந்நிலையில், ராம.ரவிக்குமாரின் வழக்கறிஞர்கள் நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. நீதிமன்ற உத்தரவை ஏற்று நடப்பீர்களா ? இல்லையா ? அதைச் சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு பதிலளித்த கமிஷனர் லோகநாதன், உங்களுக்கு இங்கு இருக்கும் சூழல் புரிகிறதா ? இல்லையா ? உங்களை அனுமதிக்க முடியாது. ‘We are not allowing’ என்று சொன்னதோடு, நீதிமன்றத்தை உத்தரவை காட்டி பயமுறுத்திய வழக்கறிஞர்களிடம், உங்களை அனுமதிக்காததால் வரும் விளைவுகளையும் சந்திக்க நான் தயார் என்று அதிரடியாக கூறினார்.
யார் இந்த லோகநாதன் IPS..?
கடந்த ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டு மதுரை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் லோகநாதன். 2002 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான லோகநாதன், திருநெல்வேலியில் உதவி காவல் கண்காணிப்பாளராக தமிழ்நாட்டில் தன்னுடைய பணியை தொடங்கியவர். தருமபுரி, புதுக்கோட்டை மற்றும் சிபிசிஐடியில் எஸ்.பியாக பணியாற்றிய லோகநாதன், சென்னையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிய லோகநாதன் பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றினார். அதோடு, சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் கூடுதல் காவல் ஆணையராகவும் பணியாற்றியவர்.
மதுரை மாநகரின் சட்ட ஒழுங்கை முறையாக கவனிக்க தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டு அங்கு 2023ல் அனுப்பி வைக்கப்பட்டார் லோகநாதன். சிறு தீப்பொறி விழுந்தாலே அது பெருங்காடு போல பற்றி எரியத்தொடங்கிடும் கந்தக பூமியான மதுரை மாநகரில் அவர் நியமிக்கப்பட்ட இந்த இரண்டு வருடத்தில் பெரிய குற்றச்சம்பவங்கள் நடைபெறாமலும், கலவரம் உள்ளிட்ட அசம்பாதவிதங்கள் நடைபெறாமலும் தடுத்து வந்தவர். மிகமுக்கியமாக நேற்று திருப்பரங்குன்றத்தில் அவருடைய சரியான திட்டமிடல் மற்றும் அணுகுமுறையால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.