தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணை. முல்லை பெரியாறு அணையில் கடந்த சில நாட்களாகவே அணையின் நீர்மட்டம் குறைந்திருந்தது. இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலும், இடுக்கி மாவட்டத்திலும் நேற்று முன் தினம் முதல் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் நிலச்சரிவு , வெள்ளப்பெருக்கு என பல்வேறு இடர்பாடுகளில் சிக்கியுள்ளது. இதனால் குமுளி, தேக்கடியில் உள்ள முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான தேக்கடி உட்பட பல பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் தற்போது  அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணையிலிருந்து தேனி மற்றும் இதர மாவட்டங்களுக்கான நீர் திறப்பு சற்று அதிகரித்துள்ளதால் வைகை அணைக்கான நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.




தேனி , ஆண்டிபட்டி இடையே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கான நீர்வரத்தும் தற்போது அதிகரித்துள்ளது.


முல்லை பெரியாறு அணை பகுதியில் 170.0மில்லிமீட்டர் மழையும், தேக்கடியில் 126.6 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. முல்லை பெரியாறு அணை , வைகை அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணைகளுக்கு நீர்வரத்துள்ளது.




இதே போல் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் வராகநதியின் குறுக்கே சோத்துப்பாறை மலைப்பகுதியில் இரு மலைகளுக்கு இடையே உள்ள சோத்துப்பாறை அணையிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானல் , மற்றும் சோத்துப்பாறை மலையடிவாரங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் 6.0மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.




தேனி மாவட்ட அணைகளின் நிலவரம்: 


வைகை அணை,


நீர்மட்டம்  - 55.68 (71 அடி),  நீர் இருப்பு – 2828 மி.க.அடி,  நீர் வரத்து – 1265 கனஅடி,  நீர் திறப்பு –1119க.அடி                                                     


முல்லை பெரியாறு அணை, 


நீர்மட்டம் - 131.30 (142 அடி), நீர் வரத்து –7815கனஅடி, நீர் திறப்பு – 1300 கனஅடி


மஞ்சலார் அணை, 


நீர்மட்டம்  - 54.60 (57 அடி) ,நீர் இருப்பு – 435.32 மி.கனஅடி , நீர் வரத்து – 0 , நீர் திறப்பு – 0 


சோத்துப்பாறை அணை, 


நீர்மட்டம் - 126.31 (126.28 அடி) , நீர் இருப்பு – 427.17 மி.கனஅடி ,நீர் வரத்து –53கனஅடி, நீர் திறப்பு – 60 கனஅடி


சண்முகா நதி அணை,


நீர்மட்டம்  - 43.10 (52.55 அடி) ,நீர் இருப்பு – 51.70 மி.க.அடி, நீர் வரத்து – 15 கனஅடி , நீர் திறப்பு – 0  கனஅடி


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!