மலை போல சோறு, அண்டாவிற்குள் ஆறு போல கறிக்குழம்பு, ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்துகொண்ட சுவரஸ்சிய திருவிழா மதுரையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது அனுப்பபட்டி கிராமம். இங்கு காலதெய்வம் கருப்பையா முத்தையா கோயில் சிறப்புடையது. இந்த கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்கும் வழக்கம் இல்லை, ஆண்டாண்டு காலமாக ஆண்கள் மட்டுமே கூடி இந்த திருவிழாவை நடத்தி வருகின்ற்னார்.
இந்த திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன. பின்னர் கறிகளை சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு ஆண்கள் மட்டும் சாப்பிட்டனர். கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த ஆண்கள் இந்த திருவிழாவில் திரளாக கலந்து கொண்டு அசைவ உணவை ருசித்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
இலை விருந்து முடிந்தவுடன் இலையை எடுக்க மாட்டார்கள். இலை காய்ந்தபின்பு தான் பெண்கள் அந்த பகுதிக்கு செல்லவேண்டும். இந்த விநோத திருவிழாவில் சுற்றுப்புற கிராம மக்கள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இது குறித்து திருவிழாவில் கலந்துகொண்டவர்கள் சிலர் கூறுகையில், ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் திருவிழா இந்த பகுதியில் சிறப்பானது. எத்தனை ஆண்கள் வந்தாலும் இங்கு சாப்பாடு கிடைக்கும். தப்பான எண்ணங்களுடன் யாரும் இதில் கலந்துகொள்ளக்கூடாது. அப்படி வரும் நபர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். சாப்பிடும் இலையை கூட யாரும் எடுக்கக்கூடாது இப்படி பல்வேறு கட்டுப்பாடு இந்த திருவிழாவில் உண்டு” என்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்