விருதுநகர் மாவட்ட காசநோய் மையத்தில், 11 மாதத்திற்கான ஒப்பந்த அடிப்படையிலான (இன சுழற்சி முறையில்) தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.
தற்காலிக பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம், மாவட்ட காசநோய் மையத்தின் கீழ் செயல்படும் கீழ்க்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான (இன சுழற்சி முறையில்) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காசநோய் சுகாதாரப் பார்வையாளர் (TB Health Visitor)-01, காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அடிப்படைத் தகுதிகளாக பட்டப்படிப்பு (அல்லது) மேல்நிலைக் கல்வி தேர்ச்சி மற்றும் பல்நோக்கு சுகாதாரம், (MPW) மகளிர் சுகாதாரப் பார்வையாளர் (LHV மகப்பேறு துணை செவிலியராக (ANM) பணியாற்றிய அனுபவம், சுகாதார பணியில் பணியாற்றிய அனுபவம், சுகாதார கல்வி, ஆலோசகர் படிப்பு (அல்லது) காசநோய் சுகாதாரப் பார்வையாளர், பயிற்சியில் தேர்ச்சி மற்றும் கணிணி படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதனைத் தவிர, பல்நோக்கு சுகாதார பணியாளர் (MPHW). அங்கீகரிக்கப்பட்ட துப்புரவு ஆய்வாளர் பயிற்சி (SI) என கூடுதல் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். மேலும், இப்பதவிக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பொது பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
மருத்துவ ஆய்வக நுட்புனர்க்கான சான்றிதழ்
காசநோய் ஆய்வக நுட்புனர், நுண்ணோக்கி சளி பரிசோதகர் (TB Laboratary Technician) -01, காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அடிப்படைத் தகுதிகளாக மேல்நிலைக் கல்வி தேர்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வக நுட்புனர்க்கான சான்றிதழ் அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும், இதனைத் தவிர, திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், சளிபரிசோதனை கூடத்தில் ஒரு வருடம் பணியாற்றிய அனுபவம் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், இப்பதவிக்கு விண்ணப்பிக்கப்படும், விண்ணப்பதாரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பத்தாரர்கள், தங்கள் தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் இருசக்கரவாகன ஒட்டுநருக்கான நிரந்தர உரிமம் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல் (Attested Xeox Copy) மற்றும் ரூ.5-க்கானஅஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் இணைத்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் அனுப்பப்படும் உறையின் மேல் பதவியின் பெயரைக் குறிப்பிட்டு“ ஒப்பந்த அடிப்படை பணியிடத்திற்கான விண்ணப்பம்” என்று குறிப்பிடப்பட வேண்டும். மேலும், மாநில சுகாதாரச் சங்கம் – NTEP ன் வழிகாட்டுதல்படி தொகுப்பூதியம் வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் தேர்வு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பங்களை 10.12.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் தேர்வுக் குழு, துணை இயக்குநர் மருத்துவபணிகள் (காசநோய்) சமுதாயகூடம், F.F.ரோடு, மணி நகரம், மாவட்ட காசநோய் மையம், விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தவைர் என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.