விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், ரூ.5.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
திருச்சுழி பேருந்துநிலையம்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ரூ.5.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
ரூ.5.60 கோடி மதிப்பில் 1097.22 சதுர மீட்டர் பரப்பளவில் பேருந்துநிலையம்
அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.60 கோடி மதிப்பில் 1097.22 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேருந்து நிற்கும் இடம், கடைகள், ஓய்வறை, மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டுமானப் பணிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு கட்டுமானப் பணிகளை துரிதமாக முடித்து, விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இந்நேர்வில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், முன்னாள் திருச்சுழி ஊராட்சி ஒன்றியகுழுத் தலைவர் திரு.பொன்னுத்தம்பி, திருச்சுழி வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.