மதுரை என்றாலே அரசியல், சினிமா தொடங்கி காதுகுத்து முதல் கல்யாணம் வரை வித்தியாசமான வசனங்களுடன் அனைவரையும் கவரும் வகையில் போஸ்டர்கள் அடித்து ஒட்டுவார்கள். திருமணவிழா சுவரொட்டிகளில் வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் படங்களை அச்சிடுவது, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் எமனுக்கே எச்சரிக்கை விடுப்பது, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது நடிகர்களை அரசியலுக்கு அழைப்பது போன்ற போஸ்டர்கள் என அத்தனை போஸ்டர்களையும்  கடந்துசெல்லும் போது பார்க்காமல் செல்ல முடியாது என்கிற அளவிற்கு ரசிப்பு தன்மையோடு் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள்.

 

 





 


இந்நிலையில்  விஜய் ரசிகர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் ஆசியுடன் வருங்கால முதலமைச்சர் விஜய் என்பது போல மதுரையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். எஸ்.ஏ.சியின் வாரிசே வருக..,! ஏழைகளின் ஒளி விளக்கே நாளைய தலைமுறை பேர் சொல்லும் எம்.ஜி.ஆரே, 2026ஆம் ஆண்டு ஜார்ஜ் கோட்டையில் அமர இருக்கும் நற்பணி நாயகரே என நடிகர் விஜய் வருங்கால முதலமைச்சர் என்ற வாசகங்களுடன் மதுரை முழுவதுமாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்தில் இருந்து  ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மூன்று பாடல்கள் வெளியானதையடுத்து சமீபத்தில் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது.

 

இந்நிகழ்ச்சியை நேரில் சென்று காணமுடியவில்லை என பலரும் வருத்தப்பட்டனர். அவர்களின் கவலையை போக்குவதற்காக, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஆங்கில  புத்தாண்டான ஜனவரி 1 ஆம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. வாரிசு படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என்பதை, அப்படத்தின் விநியோகஸ்தரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் போஸ்டர் அடித்து உறுதிபடுத்தியது.


 


 முதலில், ரஞ்சிதமே பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், ஒரு சில நாட்களிலேயே அந்தபாடல் வைரலானது. அடுத்ததாக, 30 ஆண்டு கால விஜயின் சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, தீ தளபதி பாடல் வெளியிடப்பட்டது. இந்தபாடலை நடிகர், சிம்பு பாடி, தீ செட்டில் ஆடி அசத்தினார். சின்ன குயில் சித்ரா பாடிய சோல் ஆஃப் வாரிசு சற்று செண்டிமென்ட் இருந்தது. பின்னர், வா தலைவா மற்றும் ஜிமிக்கி பொன்னு ஆகிய இரண்டு பாடல்கள் வாரிசு இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் பாடப்பட்டது குறிப்பிடதக்கது. இந்நிலையில் வாரிசு தொடர்பாக பல்வேறு போஸ்டவர்கள் ஒட்டப்பட்டு மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.