தமிழ்நாட்டில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.




தமிழகத்தில் நடைபெற்ற கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் அவரது மன்றத்தினர் தேர்தலில் நின்று குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நடிகர் விஜயின் அனுமதியுடன் விஜய்  மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக  அறிவித்து பரப்புரையில் இறங்கி உள்ளது. 



   

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள வணிகவளாகப் பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை போன்ற பொருட்கள் விற்கப்படுவதாக கூறப்பட்டுகிறது. இதனால் விஜய் மக்கள் இயக்கம் உசிலை நகரத்தலைவர் சோலைமுத்து தலைமையில் உசிலம்பட்டி தேவர்சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தேவர்சிலை முன்பாக கூடியவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல்  அருகிலிருந்த ஒரு பெட்டிக்கடைக்குள் சுமார் 10க்கும் மேற்ப்பட்டவர்கள் நுழைந்து ”படிக்கும் சிறுவர்களுக்கு இக்கடையில் குட்கா புகையிலை விற்கப்படுவதாக” கூறி கடையை முற்றுகையட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் கடைக்குள் புகுந்து புகையிலையை தேட ஆரம்பித்தனர்.



 

அப்போது தேவர் சிலை முன்பு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் இவர்களை கண்டு விசாரித்த  போது அங்கிருந்த ஒரு இளைஞரைக் காட்டி இவர் சுகாதார ஆய்வாளர் என்றனர். இதை நம்பாத காவல் அதிகாரி நீங்கள் கடைக்குள் சென்ற சோதனையிட அனுமதியில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசாருடன் வாருங்கள என்றார். ஆனால் அதைக்கேட்காமல் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் காரில் ஏறிக் கிளம்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.