அணுசக்தி துறை நிர்வாகிக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் . அதில்..,” அணுசக்தி துறை எரிபொருள் வளாகம் தலைமை நிர்வாக அலுவலர் திருமிகு டாக்டர் ஆர். முருகையா அவர்களிடம் இருந்து மே 11, 2022 அன்று கடிதம் வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் வஞ்சனை குறித்து நான் எடுத்த பிரச்னை ஒன்றில் தீர்வு கிட்டி இருக்கிறது. ஒன்றிய அரசின் தேர்வு மையங்களில் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை குறிப்பிட்டு நான் 29.06.2021 இல் ஒரு கடிதம் எழுதி இருந்தேன்
அணு எரி பொருள் வளாகம் (Nuclear Fuel Complex) 21.06.2021 வெளியிட்டு இருந்த அறிவிக்கை Stage I Priliminary (Screening) Test for the post of Stipendary Trainee Category - I, Post Code 21901- 21911. Advertisement No. NFC/02/2019 நியமன முதல்படித் தேர்வுக்காக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 6 மையங்களில், ஒரு மையம் கூட தமிழ்நாட்டில் இல்லை ; தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்கள் பெங்களூரில் போய் தேர்வெழுத வேண்டியுள்ளது என்று சுட்டிக் காட்டி இருந்தேன்.
உயர்கல்வி விகிதத்திலும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை மத்திய அரசு இப்படித்தான் அணுகுமா?தமிழகத்திலும் ஒரு தேர்வு மையம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அணுசக்தி துறைக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு வந்துள்ள பதில்தான் முருகையா அவர்களின் கடிதம் (Ref no. R1-14-1/2021/R-1/1062). அவர் தெரிவித்துள்ள செய்தி இது.
"Techinical officer/D/Advt no NFC/01/2022 பதவிக்கான அறிவிக்கைக்கான தேர்வு மையம் ஜிர்கோனியம் வளாகம், பழைய காயல், தூத்துக்குடி மாவட்டம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு எழுத்துத் தேர்வும் நேர்காணலும் மே 5-7, 2022 தேதிகளில் அணு எரிபொருள் வளாகத்தால் நடத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்"_ ஓராண்டு ஆனாலும் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் வஞ்சனைகளில் ஒன்றை சரி செய்ய முடிந்துள்ளது”என எம்.பி வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : உட்கட்சி விவகாரத்தால் திணறும் தேனி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக.. கட்சியினரிடையே சலசலப்பு