விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வல்லம்பட்டி பட்டாசு ஆலை உரிமையாளர் பூமாரி தனக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த ஜனவரி 5 ஆம் தேதி வல்லம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் என்னை கடந்த ஜனவரி 7 ஆம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்தினரில், நான்கு பேர் குடும்பத்தினருக்கு
அப்போது மனுதாரர் தரப்பில், "பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 5 பேரில், உரிமையாளரின் மகனும் ஒருவர். உயிரிழந்த மற்ற 4 பேரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடை மனுதாரர் வழங்கி உள்ளார். மீதமுள்ள இழப்பீடு பணம் விரைவில் வழங்கப்படும்" என உறுதி கூறினார் இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பூமாரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சட்டப்பிரிவு உதவி மேலாளர் பதவி உயர்வு வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கு - பணப்பலன்களை வழங்க உத்தரவு
மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 1980-ல் எழுத்தராக பணியில் சேர்ந்தவர் தங்கவேலு. இவர் அரசு போக்குவரத்து கழக சட்டப்பிரிவு உதவி மேலாளர் பதவி உயர்வு கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தகுதி அடிப்படையில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் 24.5.2012- இல் உத்தரவிட்டது. இந்நிலையில், சட்டப்பிரிவு உதவி மேலாளர் பதவி உயர்வுக்கான அடிப்படை தகுதியான முதுநிலை கண்காணிப்பாளராக பணிபுரியதாதால் பதவி உயர்வு வழங்க முடியாது என 29.5.2012-ல் உத்தரவிடப்பட்டது. 31.5.2012-ல் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து தனக்கு சட்டப்பிரிவு உதவி மேலாளர் பதவி உயர்வு வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் வழங்க உத்தரவிடக் கோரி தங்கவேலு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, "அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்பப் பிரிவு, போக்குவரத்து பிரிவு, நிர்வாகப் பிரிவு என 3 பிரிவுகள் உள்ளன. தொழில்நுட்பப் பிரிவில் தொழில்நுட்பம் பயிலாதவர்களை நியமிக்க முடியாது. அதே நேரத்தில் சட்டம் படிக்காதவர்களுக்கு சட்டப்பிரிவில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சட்டப்பிரிவு உதவியாளராக பணிபுரியும்போதே போக்குவரத்து கழக வழக்குகளை கவனித்துள்ளார். இதனால் அவருக்கு சட்டப்பிரிவு கண்காணிப்பாளர் பதவி உயர்வு பெறுவதற்கு போதுமான தகுதியுள்ளது. இருப்பினும் சட்டம் படிக்காதவர்கள் சட்டப்பிரிவு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் பொது பணி விதிகள் பின்பற்றப்படவில்லை. பதவி உயர்வு பெற்ற பலர் வேறு கழகங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, மனுதாரர் 1995 முதல் சட்டப்பிரிவு கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற தகுதியானவர். எனவே, அவருக்கு 1995 முதல் கண்காணிப்பாளர் (சட்டம்) பதவி உயர்வு வழங்கி, பணப்பலன்களை வழங்க வேண்டும். அடுத்த நிலையிலான பதவி உயர்வும், பணப்பலன்களையும் அவருக்கு வழங்க வேண்டும். இந்த நடைமுறைகளை 6 வாரத்தில் முடிக்க வேண்டும்.
ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
புதுக்கோட்டையை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் முத்து, 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டார். பணியில் சேர்ந்த 2004-ம் ஆண்டிலிருந்து பணி வரன்முறை செய்து பணப்பலன்கள் வழங்கக்கோரி முத்து அளித்த மனுவை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிராகரித்தார். அவரது உத்தரவை ரத்து செய்து 2004 முதல் பணி வரன்முறை செய்யக்கோரி முத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "தமிழகத்தில் ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு 14 மணி நேரம் மட்டுமே பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர் தொழில் புனிதமானது. ஆசிரியர்கள் நல்ல நடத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
தற்போது ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளிப்பது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. கொரோனா காலத்தில் 4 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். ஆனாலும் ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது. மக்கள் பணத்தை பொதுமக்களுக்கான நலத்திட்டங்களுக்கு செலவிட வேண்டும். ஆசிரியர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆசிரியர்களின் நடத்தைகளை பள்ளிக்கு உள்ளேயும், பள்ளிக்கு வெளியேயும் உரிய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். எனவே, தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவில் கூறியுள்ளார்.