மேற்கு தொடர்சி மலைகள் அமைந்துள்ள மாவட்டமான தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சலாறு அணை, சண்முகா நதி அணை, சோத்துப்பாறை அணை, முல்லை பெரியாறு அணை ஆகியவை முக்கிய நீராதாரங்களாக அமைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி  செல்லும் வழியில் வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணையின் நீரை கொண்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் குடிநீர் தேவையும் வைகை ஆற்றின் நீரை கொண்டு பூர்த்தி செய்யப்படுகிறது. 


”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!




தேனி மாவட்டத்திற்குள் மட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக  பருவ மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில் மழையின் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழை பொழிவும் குறைந்துள்ளது. அதிலும் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர் வரத்தும் உயர்ந்தது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 649 கனஅடியாக மட்டுமே இருந்த நிலையில், தற்போதும் அணைக்கு வரக்கூடிய நீர் வரத்தின் அளவு அதே 648 கன அடியாக இருந்து வருகிறது.


Chennai Rains: "நாங்க தயாரா இருக்கோம்! ஆனா பெரிய மழை இல்லை" ஆய்வு செய்தபின் துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி!


இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் பெரும்பாலும் வைகை அணையை சேரும். இந்த சூழலில் 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பூர்வீக பாசன நிலங்களுக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.




இந்த தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு இன்று காலை முதல் 3151 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 65 அடியை கடந்த நிலையில் முழு கொள்ளளவை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாகவும், மழை முற்றிலும் நின்று விட்ட காரணத்தாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர் வரத்து 1125 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 4337 மி.கன அடி.


Mission Impossible: 62 வயசிலும் மிரட்டும் டாம் க்ரூஸ்! தெறிக்க விடும் மிஷன் இம்பாசிபிள் டீசர் ரிலீஸ்!


முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது. நீர் வரத்து 648 கன அடி. திறப்பு 1107 கன அடி. இருப்பு 3460 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 76 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 42.14 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.


சண்முகாநதி அணை நீர் மட்டம் 52.50 அடி. இருப்பு 79.57 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 31 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் மழை இல்லை.