சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள குன்றக்குடியில் தி.மு.க., கல்லல் மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் மகள் கிருஷ்ணவேணிக்கும் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் இராம.இளங்கோவனின் மகன் பவித்ரன் திருமணத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.






பின்பு மணமக்களை வாழ்த்தி பேசும் பொழுது, மணமக்களை வாழ்த்த வந்துள்ள உறவினர்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்த்துகிறேன் என்றவர், மணமக்களை வாழ்த்தும் இந்த மேடையில் குன்றகுடி அடிகளார் எங்களை வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது சாதாரண திருமணம் அல்ல இரண்டு கழக குடும்பங்கள் இணைகின்ற நிகழ்வு. மாப்பிள்ளை, மணப்பெண் கிடைக்காமல் மேட்ரிமோனியில் தேடிக்கொண்டிருக்கின்றனர்.



 

இந்நிலையில் திமுகவிற்குள் எனக்கு பொண்ணு நீ தா, உனக்கு மாப்பிள்ளை நான் தருகிறேன் என தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் பிறப்புக்கு பிரச்னை என்றால் இன்னொரு கழக உடன்பிறப்பு தான் உதவுவார் என்பதற்கு இந்த திருமணம் எடுத்துக்காட்டு. இந்தியாவிற்கே சிறந்த மாடலாக இந்த திராவிட மாடலை நமது முதல்வர் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறாரோ, அதுபோல மணமக்கள் உற்றார் உறவினர்களுக்கு ஒரு நல்ல மணமக்களாக, திராவிட மாடல் அரசு போல ஒரு நல்ல மாடலாக திருமண வாழ்க்கை அமைய வேண்டும் எனவும் வாழ்த்தினார். 



இந்த திருமணத்தில் குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம. சுப்பிரமணி சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி முன்னாள் அமைச்சர் மு.தொன்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.