வேட்டி, சேலை திட்டத்தில் தொடர்ந்து குளறுபடிகளை உருவாக்கி, மொத்தத்தில் மூடுவிழா நடத்துவார்கள் என்று மக்களும், நெசவாளர் வேதனையை கண்ணீர் வடித்துள்ளார். முதலமைச்சர் இதற்கு உரிய விளக்க அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “புரட்சித்தலைவர் ஆண்டுதோறும்  ஏழை எளிய மக்கள் பயன் வண்ணம் இலவச வேட்டி, சேலை திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம் விசைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பெடல் தறி நெசவாளர்கள் பயன்பெற்று வந்தனர்.  புரட்சித்தலைவர் கொண்டு வந்த திட்டத்தினை புரட்சித்தலைவி அம்மாவும், அதனை தொடர்ந்து எடப்பாடியாரும்  சிறப்பாக செம்மைப்படுத்தி வழங்கினர். ஆண்டுதோறும் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு கொள்முதல் செய்யும் வகையில் ஜூன் மாதம் தொடங்கினால் தான் முழுமையாக வெற்றி பெற முடியும் கைத்தறித்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவு துறை ஆகிய மூன்று துறைகளை ஒருங்கிணைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து கடந்த சட்டமன்றத்தில் கூட கேள்வி எழுப்பப்பட்டது.

 



 

இந்த திட்டத்தில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பல்வேறு குளறுபடிகள் வந்துள்ளன. தற்பொழுது ஒரு கோடியே 24 லட்சம் வேட்டிகளும், 99 லட்சம் சேலைகளும் கொள்முதல் செய்வதாக கைத்தறி அமைச்சர் கூறியுள்ளார். இதற்கு போலியான குடும்ப அட்டைகளை ஒழிக்கப்பட்டுள்ளன என்று காரணம் கூறுகிறார். ஆனால் அதிகாரியை தரப்பிலோ கடந்த ஆண்டு இருப்புகள் உள்ளது என்று கூறுகிறார்கள். இருப்பு 5,000,10,000 இருக்கும் லட்சக்கணக்கில் எப்படி இருக்கும். அதே போல் வேறுபாடு எப்படி வரும் , அப்படி என்றால் சேலைக்கும், வேட்டிக்கும் வித்தியாசம் வருகிறது அப்படி என்றால் வேட்டி வழங்கப்படுவர்களுக்கு சேலை வழங்கப்படுமா? சேலை வழங்கப்படுவர்களுக்கு வேட்டி வழங்கப்படுமா என்ற குளறுபடி உள்ளது.

 



 

கடந்தாண்டில் பொங்கல் தொகுப்பில் முதலமைச்சர் வழங்கிய போது வீடியோ பதிவில்  வேட்டி, சேலை இல்லை. அதேபோல் எடப்பாடியார் வழங்கிய பொங்கல் தொகுப்பை எடுத்துக்கொண்டால் அந்த வீடியோ பதிவில் வேட்டி சேலை வழங்கிய பதிவு உள்ளது. அது மட்டுமில்லை கைத்தறி நெசவாளர்களுக்கு உற்பத்தி செய்த நிலுவைத் தொகை பாக்கி உள்ளது. ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர் இந்த மூன்று மாதத்தில் எப்படி ஒரு கோடி அளவில் உற்பத்தி செய்ய முடியும். இது கண்துடைப்பான செயலாகும், ஏற்கனவே நிலுவைத் தொகை உள்ளவர்கள் எப்படி உற்பத்தியை தொடங்குவார்கள். அப்படி தொடங்கினால் மூன்று மாதத்தில் எப்படி செய்வது சவாலான பணியாகும். 




 

ஏற்கனவே அம்மா ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை படிப்படியாக மூடு விழா நடத்தியது போல், தற்போது இந்த வேட்டி, சேலை திட்டத்தில் தொடர்ந்து குளறுபடிகளை உருவாக்கி, மொத்தத்தில் மூடுவிழா நடத்துவார்கள் என்று மக்களும், நெசவாளர் வேதனையை கண்ணீர் வடித்துள்ளார். முதலமைச்சர் இதற்கு உரிய விளக்க அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.




 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண.