TVK Madurai Manadu: குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை. பெண்களுக்கு என்று தனியாக பெண் தன்னார்வலர்கள் முதியவர்களுக்கு என்று தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்ட உள்ளது.
மதுரையில் தவெக மாநாடு
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. விக்கிரவாண்டியில் முதலாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. ஏற்கனவே 25-ம் தேதி மதுரை மாநாடு நடைபெறும் என சொல்லிருந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி காரணமாக தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கான காவல்துறை கேள்விகளுக்கு த.வெ.க பதில்
இந்த மாநாட்டிற்காக அனுமதி கேட்டு புஸ்ஸி ஆனந்த் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் காவல்துறையினர் சில கேள்விகளை முன் வைத்திருந்தனர் அதற்கு தற்போது புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார். அதன்படி..,” மாநாட்டின் முக்கிய நோக்கம் தமிழக வெற்றி கழக கொள்கை கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும், நிகழ்ச்சி நிரல் கட்சி கொடி ஏற்றி, உறுதிமொழி, தீர்மானம், தலைவர் உரை இறுதியாக நன்றியுரை என திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மாநாட்டில் தவெக தலைவர் விஜயைத் தவிர வேறு யாரும் முக்கிய பிரமுகர்கள் விருந்தினர் இல்லை. மாநாட்டில் பங்கேற்க வரும் விஜய் விமான நிலையத்திலிருந்து வரும் வழியில் வரவேற்க எந்த ஏற்பாடும் இல்லை.
பெண்களுக்கு தவெக மாநாட்டில் சிறப்பு ஏற்பாடு என்ன?
முக்கியமாக இந்த மாநாட்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்கள் 25,000 பெண்கள் 4500 முதியவர்கள் மற்றும் 500 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதாகவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 300 பேருந்து 750 வேன்கள் மற்றும் ஆயிரம் இருசக்கர வாகனங்கள் வர வாய்ப்புள்ளது. உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கு என்று 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு என்று தனியாக பெண் தன்னார்வலர்கள் முதியவர்களுக்கு என்று தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது. வாகன நிறுத்தத்திற்கென்று சுமார் 400 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அந்த பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநாடு ஏற்பாடு தீவிரம்
ஒருபக்கம் பிரம்மாண்டமாக மாநாடு மேடை, விஜய் நடந்து செல்லும் rampwalk way மேடை, தடுப்பு வேலிகள், ஒலி ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல மாநாடு வரும் தொண்டர்களின் வசதிக்கேற்ப குடிநீர் தொட்டிகள் பொருத்தும் பணிகளும் , சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும், மருத்துவ பாதுகாப்பு அறைகள், கழிப்பறைகள், ஏற்படுத்தும் பணிகளும் ஒரு புறம் துவங்கியுள்ளது. மாநாடு பகுதிக்கு எதிரே உள்ள 200 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டு மாநாடு வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடம் தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.