டங்ஸ்டன் திட்டத்திற்கு போராடியவர்களை டெல்லிக்கு அழைத்து செல்லவில்லை.. பகீர் கிளப்பும் விவசாயிகள்
எங்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் சதித்திட்டமாக இருக்கும் என்ற பயந்து தான் அவர்களை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்க வந்தோம். - ஒரு போக பாசன வசதி.
Continues below advertisement

விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயிகள்
பாஜகவினர் டெல்லிக்கு அழைத்து செல்பவர்கள் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த, டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளே இல்லை பரபரப்பை கிளப்பும் விவசாயிகள் சங்கம்.
விமான மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட விவசாயிகள்
டங்ஸ்டன் விவகாரத்தில் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஜனவரி 10-ம் தேதி அ.வல்லாளபட்டிக்கு நேரில் சென்று இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்த் திட்டம் வராது. அது ரத்து செய்யப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் அறிவிப்பார் அல்லது விவசாயிகள் குழுவை டெல்லி அழைத்துச் சென்று அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என உறுதி அளித்திருந்தார். அதன் பேரில் இன்று மேலூர் வட்டம் அ.வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, தெற்கு தெரு, நரசிங்கப்பட்டி, கிடாரிப்பட்டியை சேர்ந்த ஏழு பேர் கொண்ட விவசாயிகள் குழு இன்று மதுரையில் இருந்து விமான மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு கனிம மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திப்பதாக தகவல் வெளியானது.
- Schools Leave: எதிர்பார்க்கலைல்ல? பிப்ரவரியிலும் தொடர் விடுமுறை; மகிழ்ச்சியில் மாணவர்கள்!- எப்படி?
போராடியவர்களை அழைத்துச் செல்லவில்லை
இந்த நிலையில் மேலூர் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் குழு மதுரை விமான நிலையம் வந்திருந்தனர். அரிட்டாபட்டியை சேர்ந்த கருப்பணன் கூறுகையில்..,”பாஜகவினரால் அழைத்துச் செல்லப்படுபவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் இல்லை, அண்ணாமலை வந்திருந்தபோது ஒருபோக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஐந்து விவசாயிகள் தேர்ந்தெடுத்த அனுப்புங்கள் நான் அழைத்து செல்கிறேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் தற்போது வரை எங்களை எதுவும் தொடர்பு கொள்ளவில்லை. எங்களை அசிங்கப்படுத்தும் விதமாக நாங்கள் காத்திருந்தும், போராட்டத்தில் ஈடுபடாதவர்களை அழைத்துச் செல்கிறார்கள். நாங்களே குழப்பத்தில் இருக்கிறோம்.
சீர்குலைக்கும் சதித்திட்டமா?
அண்ணாமலை அழைத்ததற்கு நாங்கள் ஒருமித்த முடிவு எடுக்கவும் இல்லை, எங்களை அழைக்கவும் இல்லை, போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. முக்கியமாக போராடிய விவசாயிகள் சங்க தலைவர், செயலாளர் யாரும் செல்லவில்லை. அவர்கள் செல்வதன் முடிவு நல்ல தீர்ப்பாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம், இல்லையென்றால் விண்ணை முட்டும் அளவிற்கு போராட்டம் வெடிக்கும். எங்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் சதித்திட்டமாக இருக்கும் என்ற பயந்து தான் அவர்களை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்க வந்தோம். ஆனால் அதற்குள் அவர்கள் உள்ளே சென்று விட்டார்கள் என கூறினார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - HBD Sundar C: சிரிக்க வைக்கும் சிற்பி! தமிழ் சினிமாவின் மதகஜராஜா சுந்தர்.சிக்கு பிறந்தநாள்!
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.