டி.ஆர்.பி.ராஜா கண்டனம்:


அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது, பாஜகவினர் காலணி வீசியதற்கு, திமுக ஐடி- விங்கின் மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.









அமைச்சர் மீது தாக்குதல்:


தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று மதுரை விமான நிலையத்தில், ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது பாஜக-வினரும் கூட்டமாக வந்ததாக கூறப்படுகிறது. அரசு சார்பில் முதலில் மரியாதை செலுத்திய பிறகு பாஜக-வினர் அஞ்சலி செலுத்துமாறு, அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


பின்பு அமைச்சர் அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும்போது, அமைச்சருக்கு எதிராக பாஜகவினர் கோசங்கள் எழுப்பினர். அப்போது கூட்டத்தில் இருந்து அமைச்சர் காரின் மீது காலணியை பாஜகவினர் எறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






”உடனடியாக கைது செய்ய வேண்டும்”


இந்த சம்பவத்தை கண்டித்து டி.ஆர்.பி.ராஜா ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் தேசிய கொடி மீது தாக்குதல் நடத்தி , கொடியை அவமதிப்பவர்கள் தான், வீடுகளில் கொடியை ஏற்றச் சொல்கிறார்கள் என்று தெரிவித்தார்


மேலும், காலணி வீச்சு தொடர்புடையவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் திமுக தொண்டர்கள் கையில் எடுக்க வேண்டி வரும் என் தெரிவித்தார்.