1. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. மூலவா் மரகத நடராஜா் மீது சாத்தப்பட்ட சந்தனக்காப்பு களையப்பட்டு, 30 வகைத் திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது.
2. நாங்குநேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நாங்குநேரி மேம்பாலம் கீழ் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்த வள்ளியூரை சேர்ந்த உள்ளமுடையார்(25) என்பவரை விசாரணை செய்ததில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
3. நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நாங்குநேரி ரயில்வே ஸ்டேஷன் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த கல்லிடைக்குறிச்சி சேர்ந்த நாகூர் மீரான் என்பவரை விசாரணை செய்தனர். அவர் சட்டவிரோதமாக மதுபானத்தில் விஷசாராயத்தை கலக்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. காவல் நிலையம் அழைத்து வந்து விற்பனைக்காக வைத்திருந்த 8 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
4. தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை வரவேற் பதாக, ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
5. குமரி மாவட்டத்தில் திருமண விருந்திற்கு சென்ற புது மாப்பிள்ளை ஜெகதீஷ் மர்ம மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
6. மார்கழி மக்கள் இசை நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
7.பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
8. மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சேதமடைந்த நிலையில் உள்ள 700 பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
9. காரைக்குடி - திருவாரூர் இடையே 73 ரயில்வே கிராசிங்குகளிலும் கேட் கீப்பர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் முன்னாள் படை வீரர்களை தேர்வு செய்துள்ளது. இதனால் பயண நேரத்தில் 2 மணி நேரம் குறையும் வாய்ப்புள்ளது.
10.ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டும்தான் அனுமதிக்கப்படும் என அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளது, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.