தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சித்ரங்கநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25 முதல் 2022 அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும். அக்டோபர் 30ஆம் தேதி சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறும்.
கந்த சஷ்டி திருவிழா நடைபெறும் பொழுது பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலின் பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பது வழக்கம் இதற்காக அடையாள அட்டை வழங்கப்படும். ஆனால், இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோயிலின் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியது இதில் விரதம் இருப்பவர்களுக்காக கோயிலில் வெளியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலம் காலமாக நடைபெறும் வழிமுறைகளை மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, திருச்செந்தூர் முருகன் கோயிலின பிரகாரத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
* தமிழகத்தில் உள்ள கோவில்கள் தனித்துவமானதாகவும் கலை நயத்துடன் மிக்கதாகவும் பழமையான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகவும் திகழ்கின்றன.
* மேலும் கோவில்கள் வழிபாடு செய்வதற்கான இடங்களாக மட்டுமல்லாமல் சிற்பங்கள், சிலை ஓவியங்கள், சுவர் ஓவியங்கள் மற்றும் இசை வடிவங்கள் என அசாதாரணங்களில் வெளிப்படுத்தக்கூடிய இடங்களாகவும் இருந்திருக்கின்றன அவை புராதாரங்கள் எனப்படும் வரலாற்று நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன அதுமட்டுமல்லாமல்
* இந்த நிலத்தின் மொழியை வாழ வைக்கும் கருவியாகவும் உள்ளது ஒவ்வொரு பழங்கால கோவிலிலும் தெய்வத்தை போற்றி பாடல்கள் ஓதுதல், திருமுறை ஓதுதல், தேவ பாடல்கள், நடனம், நாடகம், நாட்டுப்புறக் கதைகள் விவாதங்கள் ஆகியவற்றிற்காக தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன சமூக மட்டும் நாகரிகத்தின் வளர்ச்சியின் கோவில்களில் முக்கிய பங்கு வைக்கின்றன
* ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலைகளில் இங்கு தேவையற்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன தெரிவித்த நீதிபதிகள்
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விரதத்தை ஒட்டி விரதமிருக்கும் பக்தர்களுக்காக 18 தற்காலிக இடங்களில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கோவில் உள்பிரகாரத்திற்குள் தேவையில்லாத நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையிலும் பக்தர்கள் விரதம் இருக்கவும் அனுமதிக்கப்படவில்லை மேலும் இங்கு யாகம் நடத்தவும் அனுமதிக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவித்ததை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்.
* எந்தப் பாகுபாடும் இல்லாமல் அமைதியான முறையில் தெய்வ வழிபாடு இருப்பது அவசியம் அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரகாரத்தில் பக்தர்கள் தங்குவது யாகம் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது கோவில் நிர்வாகம் இதை தொடர்ச்சியாக நீடிக்க வேண்டும்
* மேலும் 300 கோடி மதிப்பில் மாஸ்டர் பிளாண்ட் திட்டம் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தகவல் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது எனவே இந்த தொகையை நியாயமாக பயன்படுத்தி பணிகளை விரைவாக முடித்து இந்த பணிகள் பக்தர்களுக்கு பயன்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.