தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் லோயர்கேம்ப் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிகிறார். இவர் கடந்த 14-ந் தேதி குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பேருந்தை ஓட்டி வந்தார். அப்போது மழை பெய்ததால் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டிரைவர் முருகேசன், அரசு பஸ்சை திண்டுக்கல்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஓட்டி சென்று புகார் கொடுத்தார். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் முறையிட்டார். இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து டிரைவர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


TN Rain: தீவிரத்தை தக்கவைத்துள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தமிழ்நாட்டில் மழை எப்போ? எப்படி?



இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிரைவர் முருகேசன், இதற்கு முன்பு நத்தம் பணிமனையில் பணிபுரிந்த போது பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி சென்றார். அதேபோல் குமுளி, ராமேசுவரம் வழித்தடத்தில் பேருந்தை இயக்கும் போது ராமேசுவரத்துக்கு செல்லாமல் ராமநாதபுரத்தில் பேருந்தை நிறுத்தி சென்றதால் பொதுமக்களுக்கு இடையூறும், போக்குவரத்து கழகத்துக்கு இழப்பும் ஏற்பட்டது.


Temple Darshan VIP : கடவுள் மட்டும்தான் விஐபி.. தமிழக கோயில்களில் சிறப்பு தரிசன முறையை நீக்குவதே நோக்கம்: அமைச்சர் சேகர் பாபு அதிரடி..



 


Temple Darshan VIP : கடவுள் மட்டும்தான் விஐபி.. தமிழக கோயில்களில் சிறப்பு தரிசன முறையை நீக்குவதே நோக்கம்: அமைச்சர் சேகர் பாபு அதிரடி.


கடந்த 14-ந் தேதி கிளை மேலாளரின் அனுமதியின்றி பேருந்து லோயர்கேம்பில் இருந்து எடுத்து சென்று, திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு வெளியே பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை ஆட்சியர்  அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எடுத்து சென்றுள்ளார். டிரைவர் முருகேசன் பணியின் போது ஒழுங்கீனமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு அசவுகரியமும், போக்குவரத்து கழகத்துக்கு அவப்பெயரும் ஏற்படுத்தி இருக்கிறார். எனவே அவர் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண