சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க., மகத்தான வெற்றியை பெறும் மதச்சார்பற்ற கூட்டணி தமிழகத்தில் ஆழமாக காலூன்றி இருக்கிறது. இந்த நேரத்தில் விக்டோரியா கௌரி இந்த பிரச்னை கூறிய நபரை நீதிபதியாக நியமித்திருந்தது.
நேரடியாக மதச்சார்பின்மைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாங்களும், காங்கிரசும், மாஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சியும், மனித மக்கள் கட்சி ஆகியோர் ஒன்றிணைந்து குடியரசு தலைவர் அவர்களுக்கு தலைமை நீதிபதி அவர்களுக்கும் விக்டோரியா கௌரி கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் மோசமான முறையில் மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்த நபர் நீதிபதியாக வருவதற்கு தகுதி அற்றவர். அவரை நியமித்தது பெரும் அதிர்ச்சியை தருகிறது அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நேற்று அந்த அறிவிப்பு வந்த உடனே அந்த கடிதத்தை அனுப்பி உள்ளோம் என்று கூறினார்.
கலைஞரின் பேனா நினைவுச் சின்னமாக வைப்பது சர்ச்சையாகி வருகிறது என்ற கேள்விக்கு
கலைஞர் எழுதிய சங்கத் தமிழின் அடையாளம் தான் பேனா, அவர் எழுதிய தொல்காப்பிய பூங்கா தான் அந்தப் பேனா, அவர் தீட்டிய காவியங்கள் கவிதைகள் சங்கத் தமிழின் அடையாளம் தான் இந்த பேனா. அங்கு பட்டேலின் சிலைகள் வைக்கும் போது எதிர்ப்பு காட்டாதவர்கள் தற்போது பேனா சிலை வைக்கும் போது எதிர்ப்பு காட்டுகின்றனர். சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது. இந்த எதிர்ப்பு தேவையற்றது நிராகரிக்கப்பட வேண்டியது என்று கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivakasi : குடிநீர் மேல்நிலை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட நாய் சடலம்; மக்கள் அதிர்ச்சி! விசாரணை தீவிரம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்