Thiruparankundram: திருப்பரங்குன்றத்தில் 144 தடையை மீறி புகுந்த இந்து முன்னணியினர் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

Thiruparankundram Temple Issue: திருப்பரங்குன்றம் அன்னதான கூடத்தில் எழுந்த அரோகரா கோஷத்தால் பரபரப்பு 20-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியரை கைது செய்த போலீசார்.

Continues below advertisement
இந்து முன்னணியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் எழுந்ததுள்ளது.
 

மதுரையில் 144 தடை உத்தரவு

 
மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் நேற்று 3-2-2025 காலை 6 பணி முதல் இன்று 4-2-2025 இரவு 12 மணி வரை 2 நாட்கள், மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுக்காக்கும் பொருட்டு,  மனித வாழ்வு , பொது பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு 163 BNSS (144 CrPC)  தடை உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் ஏற்கனவே அனுமதிருந்தனர். இதனிடையே இந்து மற்றும் இசுலாமிய அமைப்புக்களை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.
 

அன்னதானம் சாப்பிட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருந்தனர்

 
இந்தநிலையில் திருப்பரங்குன்றத்தில்  சுவாமி தரிசனம் செய்ய  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்னதானம் சாப்பிட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருந்தனர். அன்னதானம் சாப்பிட்டு வெளியே வந்த நின்று இருந்த போது திடீரென கூட்டத்திலிருந்தவர்கள், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, கந்தன் மலை எங்கள், மலை திருப்பரங்குன்றம் மலை முருகனுக்குச் சொந்த திமுக அரசே வெளியேறு என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது, இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், இந்து முன்னணியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் எழுந்ததுள்ளது.
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola