உடனடியாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்திலுள்ள தர்கா கொடியை அகற்றாவிட்டால், இந்து ஆர்வலர்களும் முருக பக்தர்களும் திரண்டு வந்து அதை அகற்றும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கிறேன். - எச்.ராஜா பேட்டி.

 
திருப்பரங்குன்றம்
 
தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசு விஸ்வநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது...,” பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 23-ஆம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை அவர் முறைப்படி துவக்கி வைக்க உள்ளார். இதற்கான பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் குறித்து இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகனிடமும் காசி விஸ்வநாதர் இடமும் ஆசி பெறுவதற்காக வந்திருக்கிறேன். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
கள்ளத்தி மரத்தில் தர்கா நிர்வாகம் கொடியை அகற்ற வேண்டும்
 
கடந்த டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டது. அன்று நான் இங்கு வந்திருந்தேன் அப்போது ஒரு அதிகாரி யார் என்று ஞாபகம் இல்லை அப்போது அவர்  என்ன ஒன் மோர் கட்டம்ப்ட் என்று சொன்னார். கலெக்டர் மீதும் கமிஷனர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி ஒருவர் பிரதமர் மோடி மதுரைக்கு வரும்போது அவரது வாகனத்தை தாக்குவேன் என்று கூறியிருக்கிறார். அந்த தீய சக்தியை இன்றுவரை கைது செய்யவில்லை. மாவட்ட நிர்வாகம் எவ்வளவு தூரம் விரோதமாக உள்ளது இந்து பெண்களை கைது செய்திருந்தார்கள். இந்துக்களுக்கு விரோதமாக மலை மீது நடக்கும் விஷயங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல்துறையிடம் சொன்னேன். ஆனால், அந்த நிலையில் மலையில் உள்ள கள்ளத்தி மரத்தில் தர்கா நிர்வாகம் கொடி ஏற்றியுள்ளது 1931 தீர்ப்பு தெளிவாக உள்ளது. 
 
தீபம் ஏற்ற வேண்டும்
 
உடனடியாக அந்த மரத்திலுள்ள கொடியை அகற்றாவிட்டால், இந்து ஆர்வலர்களும் முருக பக்தர்களும் திரண்டு வந்து அதை அகற்றும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்துக்களின் புனிதமான தீபத்தூனை சட்டமே தெரியாத சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிணம் புதைக்கும் இடத்தில் தான் பிணத்தை புதைப்பார்கள் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி பிணத்தை கண்ணம்மா பேட்டையில் தான் புதைத்திருக்க வேண்டும் எதற்கு கடற்கரையில் புதைத்தீர்கள். இந்து விரோத போக்கை நிறுத்துங்கள். தை மாத பூச கார்த்திகை நட்சத்திரம் வரும் அதற்குள் தீபம் ஏற்ற வேண்டும் அப்படி இல்லையென்றால் இது தேர்தல் பிரச்சினையாக மாறி திமுக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப இந்து ஆர்வலர்கள் எடுத்து செல்வார்கள். இந்த சர்க்கார் கமிஷ்னர் அனைவருமே அடையாளம் தெரியாத ஆட்கள் தானே. கள்ளத்தி மரத்தில் அவர்கள் கொடி கட்டும்போது காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது. வேண்டும் என்றால் இப்போது உங்கள் செல்லும்போது நீங்கள் விருப்பப்பட்டால் அந்த கொடியை கழட்டுவதற்கு கூட நான் தயார். மாவட்ட ஆட்சியரும், கமிஷனரும் மிகப்பெரிய இந்து விரோதிகள். அந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே நான் எனது எதிர்ப்பை தெரிவித்திருந்தேன். கொடியை கலட்டவில்லை என்றால் இந்துக்கள் முருக பக்தர்கள் சென்று கலக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று தமிழக அரசையும் எச்சரிக்கிறேன்.
 
சரக்கு மிதுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர், அநாகரிகவாதி திருமாவளவன். ஆண்களுக்கு சரக்கு இல்லை இடுப்பு இல்லை என்று பேசிய அர்ப்ப ஜென்மம் தான் திருமாவளவன் மானமுள்ள நபரா அவர் மானங்கெட்ட நபர் பேசியதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று இசை கட்சியினர் கேட்டிருந்தனர். அதனால் செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த சம்பவத்தைப் பற்றி விஜய்யின் கருத்தைக் கேட்க சிபிஐ அழைத்துள்ளது, ஒரு சாதாரண நடைமுறை. காங்கிரஸ் கட்சி அவர்களின் இருப்பைக் காட்டுவதற்காக உளறுகிறார்கள். திரைப்படத் தணிக்கை வாரியம் (Censor Board) சில நிபந்தனைகளை முன்வைப்பது வழக்கமான ஒன்றுதான், இதற்கு மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை. விஜய்யின் முந்தைய படங்களும் தணிக்கை சிக்கல்களைச் சந்தித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். சில கோரிக்கைகள் முழுமை அடையவில்லை என்றால் சென்சார் எதிர்பார்ப்புகள் உதாரணத்திற்கு அமரன் படம் அந்த படத்திற்கு இராணுவம் உடை பயன்படுத்தப்பட்டதால் முன்னதாகவே உள்துறை அமைச்சகத்தில் அனுமதி பெற வேண்டும். இது போன்ற பிரச்னைகளை சென்சார் பார்த்துக் கொள்ளும் இதில் பாஜகவிற்கு என்ன பிரச்னை.
 
கந்தன் மலை பார்ட்-2
 
கந்தன் மலை படம் தாமரை டிவி யூட்யூபிற்காக தயாரித்த படம். ஏற்கனவே விஜயின் படத்திற்கு இங்கு சென்சார் கிடைக்காததால் மும்பை சென்று வாங்கி இருக்கிறார்கள். இது குறித்து அவரே எதுவும் சொல்லவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பாரா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் என்டிஏ கூட்டணியின் நிலையைப் பொறுத்தவரை அவரே முடிவுகளை அறிவிப்பார். நடை பயணம் என்பது நண்பர் வைகோவிற்கு ஒரு பழக்கம் அது இல்லாமல் அவரால் இருக்க முடியாது. முன்பு பஞ்சாப் மாநிலம் போதைப்பொருட்களுக்குப் பெயர் பெற்றிருந்தது, தற்போது தமிழகம் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் கடைகளுக்கு அருகே போதைப்பொருள் தாராளமாகக் கிடைப்பதாகக் கூறிய அவர், அடுத்த தலைமுறையைக் காக்க இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கந்தன் மலை இரண்டாம் பாகம் வரும் என கூறினார்.