மதுரை: பசும்பொன் தேவர் முத்துராமலிங்க தேவர் குருபூஜை முன்னிட்டு தங்க கவசத்தை கழகப்பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பசும்பொன் கோயில் டிரஸ்டியிடம் ஒப்படைத்தார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது குரு பூஜையை முன்னிட்டும், 61வது பிறந்தநாளை முன்னிட்டும் வருகின்ற 30 ஆம் தேதி தேவர் குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பங்கேற்று மரியாதை செய்கிறார்.
இதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த 10.10.2023 அன்று அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது
அதனையொட்டி அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வங்கி மேலாளர் முன்னிலையில் கையெழுத்திட்டு தங்க கவசத்தை, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தேவர் பூஜை விழாவிற்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கோவில் டிரஸ்டி காந்திமீனாளிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் விஜயபாஸ்கர், டாக்டர் மணிகண்டன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி ராஜன் செல்லப்பா, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி வி ஆர்.ராஜ்சத்யன், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மற்றும் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.