எய்ம்ஸில் செங்கல் கூட இல்லை - மதுரை எம்பி சு.வெங்கடேசன்

எய்ம்ஸ் அமைப்பதற்கான உயர்த்தப்பட்ட நிதிக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளதால் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கபடாமல் உள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் பேட்டி

Continues below advertisement

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்  95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் (உறுப்பினர் எய்ம்ஸ் மதுரை)  தலைமையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது  95 சதவீத பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே என்ற பதாதைகளை கைகளில் ஏந்தியபடி  எய்ம்ஸ் அமைவிடத்தை பார்வையிட்டனர்.  

Continues below advertisement

இதனை தொடர்ந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில்..,” சவர்க்கார் புல்புல் பறவையில் வந்தது போல் ஒரே இரவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நடந்துள்ளதா என ஆய்வு செய்தோம். கட்டுமான பணிகள் துவங்காமல் 95 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளதாக அகில இந்திய தலைவர் பொய் சொல்வது ஏற்புடையது அல்ல.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1200 கோடி என்பது 1970 கோடியாக திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்ட நிலையில் உயர்த்தப்பட்ட 700 கோடிக்காண மத்திய அரசு வழங்க வேண்டிய 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்காண மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளதால் கட்டுமான பணிகளுக்காண ஒப்பந்தம் விட முடியாத நிலை உள்ளது. உயர்த்தப்பட்ட தொகைக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக மக்களையும் மதுரை மக்களையும் பொய் சொல்லி ஏமாற்றலாம் என பாஜக அரசு நினைக்கிறது. பொய் சொல்வதையே முழு நேர வேலையாக பாஜக செய்து வருகிறது  என தெரிவித்தார். 

 
 

இதனை தொடர்ந்து பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை எய்ம்ஸ் அமைந்தால் அதற்கான பெருமை எய்ம்ஸ் அமைய முழு பங்களிப்பை கொடுத்துள்ள ஜப்பானையே சாரும். வடிவேல் கிணற்றை காணும் என புகார் அளித்தது போல் 95 சதவீத பணிகள் நிறைவடைந்த எய்ம்ஸ்யை காணவில்லை” என்றார்.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola