மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது தேனி மாவட்டம். தேனி மாவட்டம் குறிப்பாக போடி, கம்பம், தேவாரம் , கோம்பை, குள்ளப்பகவுண்டன்பட்டி, லோயர்கேம்ப், என மலையடிவாரங்களை ஒட்டியுள்ள கிராம பகுதிகளாகவே உள்ளது. இந்நிலையில் மலையடிவாரங்களில் வனப்பகுதியை விட்டு காட்டு விலங்குகள் மான், யானை போன்ற விலங்குகள்  அவ்வப்போது  வெளியேறுகின்றன.



இதனை தடுப்பதற்கு வனத்துறையினரால் மலையடிவார வனப்பகுதியை ஒட்டி சோலார் மின்வேலிகள் , அகழிகள் வெட்டப்பட்டும் உள்ளது. அப்படி வெட்டப்படும் அகழிகள் மூலம் காட்டு விலங்குகள் அகழிகளை கடந்து வெளியே வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வராமல் திரும்ப வனப்பகுதிகளுக்குள் சென்று விடும். தேனி மாவட்டத்தில் சமீப காலமாக தேவாரத்தில் ஒற்றை காட்டுயானை உட்பட காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதால் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. தேவாரம் பகுதியில் மட்டும் காட்டு யானையால் இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் , அதே போல கூடலூர் அருகே உள்ள மின் நிலையம், குள்ளப்பகவுண்டன்பட்டி ,லோயர்கேம்ப் போன்ற மலையடிவார பகுதிகளையொட்டி காட்டு விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறுவதாகவும் , வெளியேறும் விலங்குகள் விளைநில பயிர்களை சேதப்படுத்துவதாகவும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.



வனப்பகுதியை விட்டு வெளியேறும் மான் போன்ற விலங்குகளை சட்டவிரோதமாக சிலர் வேட்டையாடப்பட்டும் வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கூடலூரில் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளை நிலத்திற்குள் வந்த மானை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்ததில் இருவர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டதில் பிரபலமான  சின்னமனூர் அருகே வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலமாக திகழும் மேகமலை வனப்பகுதிகள் புலிகள் காப்பக சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, இது தமிழ் நாட்டில் இரண்டாவது புலிகள் காப்பக சரணாலயமாக உள்ளது. மேகமலைக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கரடி ,புலி, யானைகள், சிறுத்தை என வன விலங்குகள் அதிகம் உள்ளதால் இந்த வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியை கிழக்கு மற்றும் மேற்கு வனப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு வனப்பகுதிகளை  காப்பதற்கு அதற்கான வனத்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஊருக்குள் வரும் வன விலங்குகளை தடுக்க வனப்பகுதிகளை சுற்றி வெட்டப்பட்டுள்ள அகழிகள் பராமரிப்பின்றி முற்றிலும் மேடாகியுள்ளது அதனை சரி செய்து அகழிகளை அகலப்படுத்த வேண்டுமெனவும், மலையடிவார பகுதிகளையொட்டி செய்யப்படும் விவசாய  விளை நிலங்களுக்குள் வரும் காட்டு விலங்குகள்  வருவதை தடுக்க பராமரிப்பின்றி கிடக்கும் சோலார் மின் வேலிகளை பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென விவசாயிகளிடம் கோரிக்கையும் எழுந்துள்ளது.


மேலும் படிக்க: ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!