தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் மதுரை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணைக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், வருசநாடு, வெள்ளிமலை, கொட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர்வரத்தாக உள்ளது.


Coimbatore Car Blast: கோவை கார் வெடிப்பு - 6வது நபரை இரவோடு இரவாக தட்டித் தூக்கிய காவல்துறை..!



இதே போன்று தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாத சூழல் உள்ளது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 135.35 அடியாக இருந்தது.


crime: காதல் விவகாரத்தில் மகள் மீது சந்தேகம்... தந்தை செய்த கொடூர செயல்... தெலங்கானாவில் அதிர்ச்சி




நீர்வரத்து வினாடிக்கு 1,107 கன அடியாக காணப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 135.41 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 878 கன அடியாக குறைந்து காணப்பட்டது. வினாடிக்கு 511 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக முற்றிலும் மழைப்பொழிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளின் இன்றைய நிலவரப்படி நீர் நிலவரம்


Today's 
27.10.2022
 Dam level data:  


1) Vaigaidam -
Level- 70.44  (71)feet
Capacity:5943 Mcft
Inflow: 974 cusec
Outflow : 1769cusec


2)Periyardam: 135.50 (142)feet
Capacity:5992 Mcft
Inflow:  673 cusec
Outflow: 511cusec


3) Manjalar
Level- 55.0(57) feet
Capacity:435.32 Mcft
Inflow: 132 cusec
Outflow: 40 cusec


4)Sothuparai dam 
Level- 126.31 (126.28)feet
Capacity: 100 Mcft 
Inflow: 42 cusec
Outflow:30 cusec
 
5)Sanmuganathi dam
Level-52.50 (52.55)feet
Capacity:79.57 Mcft
Inflow :3 cusec
Outflow: 0 cusec.