தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற, பிரசித்தி பெற்ற வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் நடத்தப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. தேனி மாவட்டத்தில் மிக முக்கிய ஒரு திருவிழாவாக பார்க்கப்படும் இந்த கோவில் திருவிழா அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ள வருகை தருவார்கள். தேனி மாவட்டத்தில் உள்ளூர் திருவிழாவில் இது மிக முக்கியமாக பார்க்கப்படும் ஒரு திருவிழாவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தேனி : வெகு விமரிசையாக நடைபெறும் கம்பம் கெளமாரியம்மன் கோவில் திருவிழா..




இந்த திருவிழா கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கொண்டாடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் வருகின்ற 10.5.2022 முதல் 17.5.2022-ஆம் தேதி வரையில் கொண்டாடப்படவுள்ளது. திருவிழா சமயங்களில் தினந்தோறும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கோவில் திருவிழா கொண்டாடப்படாததால்  இந்த வருடம் கூடுதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.




திருவிழாவிற்கு வந்து செல்வதற்கு பக்தர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி அரசு போக்குவரத்து துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது . அது சமயம் தேனியிலிருந்து உத்தமபாளையம் மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உப்புக்கோட்டை விளக்கு முன்பு திருப்பப்பட்டு மாற்று வழியாக குச்சனூர், மார்க்கையன்கோட்டை, சின்னமனூர் ,உத்தமபாளையம் சென்றடையலாம் அதேபோன்று சின்னமனூரில் இருந்து தேனி மார்க்கமாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்து உப்பார்பட்டி விளக்கு முன்பு திருப்பப்பட்டு மாற்று வழியாக தாடிச்சேரி, கொடுவிளார்பட்டி ,அரண்மனை புதூர், வழியாக சின்னமனூர் சென்றடையலாம்.


பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்




மேற்படி வாகன மாற்று வழித்தடங்கள் 10.5.2022 காலை 6 மணி முதல் 17.5.2022 நள்ளிரவு வரை செயல்பாட்டில் இருக்கும். இது சம்பந்தமாக பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதறு வழிவகை செய்யுமாறு தேனி மாவட்ட காவல்துறை மற்றும் நிர்வாகம் சார்பாக அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண