தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.
பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது.
தற்போது பருவமழை அதிகமாக பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலும் கடுமையான மழை பொழிவு கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருந்து வருகிறது.
Crime: “குடிக்கும்போது எப்போதும் ஒருமையில் திட்டுவார்” - பைனான்ஸ் ஊழியரை போட்டுத்தள்ளிய நண்பர்கள்
கேரளாவை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் தொடர் கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுருளி அருவிக்கு நீர்வரத்து வரும் தூவானம், மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடுமையான தொடர் கனமழை பெய்துவரும் நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் போல் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது.
அருவியில் எற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இந்த மாதம் ஆரம்பத்திலிருந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 23 வது நாளாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க வரும் வெளி மாவட்ட, மாநில சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்