மேற்கு தொடர்ச்சி மலையடிவார மாவட்டமான தேனி மாவட்டத்தில், கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. வெயிலின் தாக்கத்தால்  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள  வனப்பகுதியில் காட்டு தீ அவ்வப்போது பற்றி எரிந்து வந்தது. சென்ற வாரங்களில் பகலில் கடும் வெயிலிலும் மலை பகுதிகளில் அவ்வப்போது மழையும் பெய்து வந்தது.  நேற்று மற்றும் இன்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.


மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சாரல் மழை பெய்த நிலையில், ஒரு சில இடங்களில் சாரல் மழை  அதிக கன மழையாக மாறியது. போடி வட்டாரங்களில் பிற்பகல் 2 மணியளவில் சாரல் மழை பெய்தது. சிறிது நேரம் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் மாலை பெய்த கன மழையால் சாலை எங்கும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளில் நேற்று மதியம் தொடங்கிய மழை அவ்வப்போது ஓய்ந்து வந்த நிலையில் மாலை திடீரென கன மழையாக மாறியது. ஆண்டிபட்டியை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் இன்று காலை முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கி உள்ளது. காற்று அதிகமாக இருந்ததால் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது.




மாவட்டத்தில் உள்ள கம்பம், பெரியகுளம், சின்னமனூர், கூடலூர், லோயர்கேம்ப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் சாரல் மழையும் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்தது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில் நேற்று பெய்த இந்த மழையால் விளைநிலங்களில் கோடை உழவு செய்த விவசாயிகள், மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களுக்கும் இந்த கோடை மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் உருவெடுக்கும் சுருளி அருவி , குரங்கணி அருவி போன்ற நீர் வீழ்ச்சிகளில் இன்று நீர் வரத்து  அதிகரித்துள்ளது இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 THENI DISTRIC
 Date:12.04.2022 Rainfall data(in mm):


1) Andipatti-30.6
2) Aranmanaipudur-43.0
3) Bodinayakanur- 25.2
4) Gudalur-87.4
5) Manjalaru -2.0
6) Periyakulam-86.0
7) Periyar dam-35.0
8) Thekkadi-44.6
9) Sothuparai-27.0
10) Uthamapalayam-9.0
11) Vaigai dam-3.8
12) Veerapandi-29.0


Total =422.6
Average =35.21


தேனி : உயரம் மாறி மாறி காட்சி தரும் சிவலிங்கம்.. பூலா நந்தீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண