தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாருக்கு 10008 திருமாங்கல்ய சரடுகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பத்தாயிரத்தி எட்டு  அர்ச்சனை மந்திர வழிபாடு  செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்திருந்து பூஜையில் பங்கேற்றனர்.




தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில்.போடிநாயக்கனூர் ஜமீன்தாரர்களால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலைத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கோவிலில் இன்று கருட பஞ்சமியை முன்னிட்டும், ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு தனிச் சன்னதிகளில் வீற்றிருக்கும் கருடாழ்வார் மற்றும் பத்மாவதி தயாரித்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.




கருட பஞ்சமியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தனி சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாருக்கு ஆடி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு 10008 திருமாங்கல்ய சரடுகளால் புடவை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.பத்தாயிரத்து எட்டு மந்திர வழிபாடுகள் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்திருந்து வழிபாட்டில் பங்கேற்றனர். பத்தாயிரத்தி எட்டு  திருமாங்கல்யசரடுகளை பத்மாவதி தாயாருக்கு உடையாக உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை   பக்தர்கள் பத்தி பரவசத்துடன் தரிசித்து சென்றனர்.




இதேபோல் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதி மற்றும் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு போடிநாயக்கனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அஷ்ட சித்தி வராகி அம்மன் கோவிலில் அமைந்துள்ள எட்டு வாராகி அம்மன் விக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று விசேஷ வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் வாராகி அம்மனை தரிசனம் செய்தனர். பெண் பக்தர்கள் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.




 போடிநாயக்கனூர் திருமலாபுரம் அஷ்ட சித்தி வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வாராகி அம்மனின் எட்டு அவதாரங்களை சிறப்பிக்கும் வகையில் எட்டு வாராகி அம்மன் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வாராகி அம்மனுக்கு மிகுந்த சிறப்பு தினமான ஆடி மாத வளர்பிறை  பஞ்சமி திதியை முன்னிட்டு அஷ்ட சித்தி வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றது. பெண் பக்தர்கள் கோவிலில் உள்ள அம்மிக் குழவியில் பாரம்பரிய முறைப்படி மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.


அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.