தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய இலவச வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், வேலைவாய்ப்பு, உதவித்தொகை, வங்கி கடன் வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 127 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
80 பயணிகளுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு வலி! சென்னையில் இருந்து சென்ற ரயிலில் பரபரப்பு
இக்கூட்டத்தில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான நடைகுச்சி வேண்டி மனு கொடுத்தவர்களுக்கு உடனடியாக அக்கூட்டத்திலே தலா ரூ.9,050/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் 2 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.7900/- மதிப்பிலான சக்கர நாற்காலி ஒரு மாற்றுத்திறனாளிக்கும், ரூ.760/- மதிப்பிலான பார்வையற்றோருக்கான நடைகுச்சி ஒரு மாற்றுத்திறனாளிக்கும் வழங்கப்பட்டது. மேலும், தலா ரூ.6,840/- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கும் என மொத்தம் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 95,160/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
பிராட்மேன், கோலி சாதனையை சமன் செய்த வில்லியம்சன்! வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்து அசத்தல்!
முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்கும் பணிகள் முதல் துவங்கப்பட உள்ளதை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.