கொளுத்தும் வெயிலுக்கு இடையே திடீர் மழையால் தேனி மக்கள் மகிழ்ச்சி..!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மிதமான கனமழையால் முற்றிலும் குளிர்ச்சி நிலவியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.

Continues below advertisement

ஒவ்வொரு வருடமும் கால சூழ்நிலைகள் மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது. கோடை வெயில் காலங்களில் போதுமான மழையின்மை ஏற்படுவதும், கோடை காலங்களில் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கமும், ஒவ்வொரு வருடத்திற்கும் ஒவ்வொரு வருடம் அதிகரித்துக் கொண்டே செல்வது தொடர்ந்து வருகிறது. வானிலை மாற்றம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையை இந்த வருடம் கடந்த வருடத்தை விட கூடுதலான வெயிலின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.  இந்த சூழ்நிலையில் கோடை மழையும் பல்வேறு பகுதிகளில் செய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது மழை நிலவரம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

Continues below advertisement

Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...


தற்போது நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வரும் சூழலும் உள்ளது. கோடை காலம் நெருங்கி வரும் சூழலில் கோடை வெயிலுக்கு முன்பே தேனி மாவட்டத்திலும் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பெரியகுளம், கம்பம் ,சின்னமனூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...


குறிப்பாக தேனி அருகே பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது இரவிலும் வெப்பம் எதிரொலித்ததும் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும்  அதன் சுற்றுவட்டார பகுதிகளான சில்வார்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, எ.புதுப்பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட  இடங்களில்  கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் பலத்த இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இன்று 4வது நாளாக  பெரியகுளம் அதனை சுற்றியுள்ள வடுகபட்டி, தாமரைக்குளம், கைலாசபட்டி, கல்லுப்பட்டி, லட்சுமிபுரம், எ. புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நண்பகல் 12 மணி முதல் ஒரு சில இடங்களில் சாரல் மழையும் ஒரு சில இடங்களில் மிதமான கனமழையும் பெய்தது.

TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?


இந்த மழையானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதே போல் தமிழக, கேரள எல்லையான கம்பம், கூடலூர், போடி பகுதிகளிலும் நேற்று மாலை மற்றும் இன்றும் சாரல் மழை பெய்தது. கடந்த நாட்களை விட வெயிலின் தாக்கமும் சற்று குறைந்துள்ளது. தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக இரவில் மட்டும் மழை பெய்த நிலையில் இன்று நண்பகலிலும் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola