பெரியகுளத்தில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வசதி செய்து தராதால் இரண்டு நகர்மன்ற உறுப்பினர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நகர்மன்ற தலைவர் சுமிதா தலைமையில் நகராட்சி ஆணையாளர் கணேசன் முன்னிலையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பெரியகுளம் பேருந்து நிலைய இடமாற்றம் செய்ய கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பொதுமக்கள் கூட்ட அரங்கிற்குள் வந்து போராட்டம் நடத்தியதால் கூட்டம் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.


Vijay Political Entry: விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? விஜயின் ஜோதிட கட்டங்கள் சொல்வது என்ன?




மேலும், பேருந்து நிலையம் இடம் மாற்றம் செய்ய இருந்த தீர்மானத்தை கைவிடுவதாக நகர்மன்ற தலைவர் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து நகர்மன்ற கூட்டம் ஒரு மணி நேர கால தாமதமாக நடைபெற்ற கூட்டத்தில் முன்னதாக திமுகவைச் சேர்ந்த 7வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஹசீனா எழுந்து தனது வார்டு பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் இரண்டு ஆண்டுகளாக செய்து தராத காரணத்தை தெரிவிக்கக் கோரி கூட்டத்தை நடத்த விடாமல் தொடர்ந்து நகர்மன்ற தலைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Rain Alert : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்களில்?


எனவே ஒரு கட்டத்தில் நகர் மன்ற கூட்டத்தை கூட்ட விடாமல் தொடர்ந்து 7வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் வாக்குவாதம் ஈடுபட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர் மஜீத் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு திமுக நகர மன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியதை தொடர்ந்து வாக்குவாதம் நிறைவு பெற்றது. மேலும் 23வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் குமரன் மற்றும் 25 வது வார்டு நகர் மன்ற  உறுப்பினர் ஜெயபாண்டி என்ற பெண் இருவரும் சேர்ந்து இதே போன்று தங்களின் வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புகள் இதுவரை வழங்கவில்லை ஆனால் வரி வசூல் மட்டும் செய்யப்படுகிறது எனவும், வாக்களித்த மக்களுக்கு நான் என்ன பதில் சொல்வது என கூறி இரண்டு நகர்மன்ற உறுப்பினர்களும் நகர்மன்ற தலைவரின் இருக்கைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


"அப்படி மட்டும் சொல்லாதீங்க.. என்னோட பாதி சம்பளத்த தரேன்" - உச்ச நீதிமன்ற நீதிபதி


மேலும் 2வது வார்டு உறுப்பினர் பால்பாண்டி தனது பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட நியாய விலை கடைக்கு இதுவரையில் மின்சார இணைப்பு வழங்காத நிலையில் திறப்பு விழாவின் போது அமைக்கப்பட்ட மின் விளக்குகளுக்கு, மின்சாரத்தை திருடி திறப்பு விழா நடத்தி உள்ளீர்கள் என குற்றம் சாட்டியதோடு, அரசு நிகழ்ச்சிகளுக்கு இதுபோன்று மின்சாரத் திருடி நடவடிக்கையில் மேற்கொண்டால் மற்றவர்கள் மின்சாரத்தை திருட மாட்டார்களா என குற்றம் சாட்டி கேள்வி எழுப்பினார்.இதனால் இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் கொண்டுவரப்பட இருந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.