பெரியகுளம் நகராட்சியில் பணிபுரியும் 70-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலி 609 ரூபாய் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளாததால் பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார்.




தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் தூய்மை பணிகளை  மேற்கொள்வதற்காக தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் 70க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 400 ரூபாய் ஊதியமாக வழங்கி வருகின்றனர்.


Yuvaraj Singh: தோனியை கழற்றிவிட்ட யுவராஜ் சிங் - ரசிகர்கள் ஷாக் - இப்படி ஒரு பிளேயிங் லெவனா?




ஆனால் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் 29.06.2023 ம் தேதி அறிவித்த குறைந்தபட்ச கூலி தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ரூபாய் 609 ஐ நிலுவ தொகையுடன்  வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியூசி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக  ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர்கள் 70 க்கும் மேற்பட்டோர் இன்று பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




மேலும் பெரியகுளம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்த EPF - ESI யில் தொடர்ந்து முறையீடு ஊழல் செய்யும் ஒப்பந்த நிறுவனமான ராம் அன் கோ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களுக்கு தேசிய விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் முழு நேர விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும். தளவாடப் பொருட்கள் யூனிஃபார்ம் முறையாக வழங்க வேண்டும். மக்கள் தொகைகேட்ப தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .


Copa America 2024: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி - 16வது முறையாக பட்டம் வென்று மெஸ்ஸியின் அர்ஜெண்டினா சரித்திரம்


தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டு பகுதிகளிலும் இன்று காலை தூய்மை பணிகள் மேற்கொள்ளாததால் அனைத்து பகுதிகளிலும்  வீட்டு உபயோக கழிவு பொருட்கள் மற்றும் சாலைகளில் தேங்கிய கழிவு பொருட்கள் அகற்றாமல் இருந்து வருவதால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்ளது . இந்த போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் தென்கரை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .