திராட்சை என்றால் நம் நினைவுக்கு வருவது அதன் புளிப்பு மிகுந்த சுவை தான். பல வகை திராட்சைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. பச்சை திராட்சை, கருப்பு திராட்சை, பன்னீர் திராட்சை, சீட்லெஸ் திராட்சை, சிவப்பு திராட்சை என வகைகள் ஏராளம். திராட்சையில் புளிப்பு சுவை இருப்பதால் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போல இதுவும் சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்தது தான். ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு வகை திராட்சை விற்பனைக்கு வரும். திராட்சையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. சத்துக்கள் என பார்க்கப்போனாலும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.



திராட்சையில் வைட்டமின் பி12, சிங்க், காப்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. திராட்சையில் இருக்கும் மருத்துவ குணங்கள் என எடுத்துக்கொண்டால் ஏராளம். குறிப்பாக நம் தமிழ்நாட்டில் அதிகம் கிடைக்கும் பன்னீர் திராட்சை அதிக அளவு நன்மை பயக்கும். பன்னீர் திராட்சையில் டேரோஸ்டில்பேன் என்ற உட்பொருள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புக்களை குறைத்து, கொழுப்பின் அளவை சீராக வைக்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் சி  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல் ஈறுகள், தசைகளை வலுப்படுத்தும். திராட்சை சாப்பிடுவதால் நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து வறட்டு இருமல் வராமல் தடுக்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை தேனி மாவட்டத்தில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.


சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?




தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் நெல், திராட்சை, தென்னை, வாழை என அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வரும் வேளாண் பகுதியாக விளங்குகிறது. கம்பமும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூடலூர், சுருளிப்பட்டி, காமய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் மட்டும் இல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையும் மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை  சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேலான பகுதிகளில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.




இந்த பகுதியில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சை மதுரை, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக , கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால், அதிக அளவில் கேரளாவுக்கு திராட்சை  ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.


பருவ மழை காரணமாகவும் சென்ற மாதங்களில் பெய்த கனமழையாலும் திராட்சை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்ற மாதங்களில் ஒரு கிலோ திராட்சை ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கருப்பு பன்னீர் திராட்சை ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, சென்ற மாதத்தில் பெய்த மழை காரணமாக திராட்சை பழத்துக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனவும் தற்போது மழை இல்லாததால் திராட்சை பழ விலை உயர்ந்துள்ளது என்றனர்.