தமிழக, கேரள எல்லையில் உள்ள குமுளியிலிருந்து கம்பம் நோக்கி வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் இடித்து விபத்துக்குள்ளானது.
தமிழக கேரள எல்லையில் உள்ளது தேனி மாவட்டம். இங்கு இருந்து கேரளா சென்று வர மூன்று வழித்தடங்கள் உள்ளது. கம்பம் மெட்டு சாலை, போடி மெட்டு சாலை மற்றும் குமுளி மலைச்சாலை இச்சாலை வழியாக கேரளாவில் உள்ள போக்குவரத்து பயணிகள் மற்றும் தமிழகத்திலிருந்து கேரளா செல்லக்கூடிய பயணிகள் என நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த மலை பாதையில் சென்று வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய மலைச்சாலையை பயன்படுத்துவதற்காக கம்பம் போக்குவரத்து பணிமனையில் இருந்து நாள்தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் குமுளியில் இயங்கக்கூடிய போக்குவரத்து பணிமனையானது தற்போது கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பகுதியில் இயங்கி வருகிறது. இதற்காக குமுளி மலைச் சாலையில் உள்ள சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் சென்று குமுளியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் அரசு பேருந்துகள் இதற்காக கூடுதல் டீசல் அளவில் செலவிட்டு வருகிறது. இது முற்றிலுமாக குமுளியில் இருந்து அரசு பேருந்து போக்குவரத்து பணிமனை இயங்கப்பட வேண்டும் என பலதரப்பு மக்கள் கோரிக்கை உள்ளது.
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
இந்நிலையில், நேற்று மாலை குமுளி மலையிலிருந்து கம்பம் நோக்கி வந்த அரசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்ஸில் பயணித்த பயணிகள் சிறிதும் சேதம் இன்றி உயிர் தப்பினர். இத்தகைய செயல் மலைச்சாலையை பயன்படுத்தும் இருசக்கர வாகன மற்றும் நான்கு சக்கர வாகன பயணிகளை பெரிதும் அச்சுறுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள் தங்களது பயணத்தில் பெரும் விபத்தை தவிர்த்தால் பெருமூச்சு விட்டனர். தமிழக அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுத்தியதால் ஏராளமான மலைச்சாலையில் பயணிக்கும் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.