தேனி மாவட்டம் உத்தமபாளையம் உட்கோட்டம், உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வார்டு 5 காவேரி தெரு, அனுமந்தன்பட்டியில் வசிக்கும் இருளாயி (65), என்பவர் 2019ஆம் ஆண்டு உத்தமபாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி தனது தங்கை லட்சுமியிடம் அம்பலகாரர் தெருவில் உள்ள ராஜம்மா என்பவரின் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்த போது தனது தம்பி மருமகன் முத்தீஸ்வரன் (எ) வடிவேல் (26), என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட எண்222/2019 U/s 294(b), 302 IPC பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த  வழக்கு தொடர்பாக விசாரணை செய்ததில் உயிரிழந்த லட்சுமி (50), அனுமந்தன்பட்டியில் என்பவர் தங்கை என்பதும், நாகராஜ் என்பவர் தம்பி என்பதும் தெரியவந்தது.


Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!




விசாரணையில் தம்பி மகள் மலர்க்கொடியை  திருமணம் செய்துள்ளார். தனது மாமனாரின் பூர்வீக சொத்தான 2 குழி நிலத்தில் தனது மனைவிக்கு பங்கு கேட்டு வாதியிடமும் இறந்து போன லட்சுமியிடமும் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வாதியும் அவரது தங்கை லட்சுமியும் பூர்வீகசொத்தை விற்றுவிட்டதாக எதிரிக்கு தெரியவரவே தனது மனைவிக்கு பங்குகொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தனது இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அம்பலகாரர் தெருவில் உள்ள லட்சுமியின் வீட்டிற்குவந்துள்ளார்.


லட்சுமி தனது அக்கா இருளாயி உடன் அருகில் உள்ள ராஜம்மாள் என்பவரின் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவரிடம் எதிரி எனது மனைவிக்குரிய பங்கை தராமல் ஏமாற்றுகிறாயா நீ இத்தோடு செத்து ஒழிந்துபோ என்று கூறி தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் தலையின் பின்பக்கம், இடது கை புஜம் மற்றும் இடது கையில் வெட்டி கொலை செய்துள்ளார். என்பது விசாரணையில் தெரியவந்தது.


Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?




இந்த நிலையில் வடிவேலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கின் இறுதிஅறிக்கை 03.10.2019 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும், விசாரணையானது மகிளா நீதிமன்றம், தேனியில் (FTC Mahila Court Theni) நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து  வடிவேல் குற்றவாளி என மகிளா நீதிமன்ற நீதிபதி அனுராதா, அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டு. எதிரிக்கு 294(b) வழக்கிற்கு ரூ 2,000/- அபராதமும், 302வழக்கில் ஆயுள்தண்டணையும், ரூ.2,000/- அபராதமும், அபாரதத்தை கட்டத்தவறினால்  ஓர் ஆண்டு சிறை தண்டணையும் விதித்து தீர்ப்பளித்தார்.