தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தேனி மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.


AIADMK: எடப்பாடி பழனிசாமி வசமான அதிமுக.. தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு.. இன்று விசாரணை



இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல் பகுதியில் திடீரென கனமழை பெய்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் தண்ணீரில் சிக்கி தவித்தனர்.  இதையடுத்து உடனே வனத்துறையினர் விரைந்து வந்து சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதைதொடர்ந்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.


UPI Transaction : வருகிறது ஆப்பு: திணறவைக்கும் டிஜிட்டல் இந்தியா: ஏப்ரல் 1 முதல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்...




சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி சந்திப்பு.. என்ன விஷயம் தெரியுமா?


இந்நிலையில் நேற்று முன்தினம் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி சீரானது. இதனால் நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது வார நாட்கள் மற்றும் பள்ளிகளில் தேர்வு நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. அவர்கள் அருவியில் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர். இதற்கிடையே மாலை 6 மணி அளவில் நீர்வரத்து அதிகரித்ததால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண